என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாடு உயிரிழப்பு"
- கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
- உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கோனாதி கிராம மக்கள் பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர்.
- பொதுமக்கள் கோவில் மாடு இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கோனாதி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனுறை காளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பசு மாட்டை வழங்கினார்.
இதனையடுத்து கோனாதி கிராம மக்கள் அந்த பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மேச்சலுக்குச் சென்ற கோவில் பசுமாடு பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த தகவலை அறிந்த கிராம பொதுமக்கள் கோவில் மாடு என்பதால் அதன் இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.
சாந்த நாயகி உடனுறை காளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பசு மாடு இறந்த சம்பவம் கோனாதி கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது.
- சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.
ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது. இதன் அருகே எதிரெதிர் இரண்டு டாஸ்மாக் பார் உள்பட வணிக வளாகங்களும் உள்ளது. அதனால் இந்த இடம் பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்திலும் அதிக கூட்ட நெரிசலாக காணப்படும். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இந்த உயர் மின்னழுத்தம் மின்சார பெட்டி அருகே மாடு ஒன்று நடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்த டாஸ்மாக் பாருக்கு வந்தவர்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக மின்சார ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து மாட்டை சாலையில் போட்டு விட்டு சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் சாலையில் கிடந்த மாட்டை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.
மழையின் காரணமாக சாலையில் நடந்து சென்ற மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்