search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமோனா ஹாலெப்"

    • அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

    முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    • சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.

    முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் சிமோனா ஹாலெப், மியாவுடன் மோதினார்.
    • இதில் சிமானோ ஹாலெப் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

    டொரண்டோ:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மியா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • ரிபாகினா அரையிறுதியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    ×