search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருவாயூர் எக்ஸ்பிரஸ்"

    • வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும்.
    • ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    கேரள மாநிலம் குருவாயூர் முதல் புனலூர் வரை செல்லும் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே பயணிகள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டியாக இயங்கும் இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும் எனவும், வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) மறுநாள் 28-ந் தேதி குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு கிளம்பி இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இனி விருதுநகர் மேற்கு, நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு இது ஏதுவாக அமையும். மக்களின் ரெயில் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்து சென்று தொடர்ந்து ரெயில்களையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்று தந்த ராஜா எம்.எல்.ஏ.விற்கு தென் மாவட்ட ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.
    • தெற்கு ரெயில்வே தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொல்லம் கோட்டயம்- ஏற்றுமானூர் மற்றும் எர்ணாகுளம்-திருச்சூர் ஆகிய பிரிவுகளில் ரெயில் நிலையங்களில் திட்ட மிடப்பட்டுள்ள பாதை பராமரிப்பு பணிகளுக்காக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவது திருவனந்தபுரம் சென்ட்ரலில் நிறுத்தப்படும். அதாவது திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் குருவாயூர் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) குருவாயூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து சேவையைத் தொடங்கும். அதா வது குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் (3 நாட்கள் காயங்குளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் செல்லாது. அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற் றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    • சமூக விரோதிகள் ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டுகளை வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    • கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் பெட்டியின் ரெயில் படிக்கட்டுகளை சரி செய்து பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருமங்கலம்:

    சென்னையில் இருந்து நாள்தோறும் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை மதுரை வந்தடைந்த ரெயில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியை கடந்து சென்றபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். சத்தம் வந்த ரெயில் பெட்டி பகுதியில் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் மர்மநபர்கள் பெரிய அளவிலான இரும்பு துண்டை வைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

    ரெயில் வந்த வேகத்தில் இரும்பு துண்டு மீது மோதியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ரெயில் பெட்டியில் ஏறும் படிக்கட்டுகள் வளைந்து சேதம் அடைந்திருந்தன. அத்துடன் தண்டவாள பகுதியில் உள்ள 4 ஸ்லீப்பர் கட்டைகளும் உடைந்தது.

    ரெயில் பெட்டியில் படிக்கட்டை வளைக்கும் அளவிலும், ஸ்லீப்பர் கட்டிகளை தகர்க்கும் வகையிலும் சக்தி வாய்ந்த இரும்பு துண்டை மர்ம நபர்கள் தண்டவாளத்தில் வைத்துச் சென்று உள்ளனர். எனவே இது ரெயில் கவிழ்ப்புக்கு சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர் விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த இரும்பு துண்டுகளை சேகரித்தனர்.

    தொடர்ந்து அந்த ரெயில் தண்டவாளப் பகுதியில் வேறு ஏதேனும் இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் ஆய்வுக்கு பின் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் பெட்டியின் ரெயில் படிக்கட்டுகளை சரி செய்து பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

    தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகளை வைத்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது ரெயில்வே போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக விரோதிகள் ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டுகளை வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

    விபத்து நடந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுவாங்கும் நபர்கள் ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். எனவே போதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×