search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டல்"

    • ஓட்டலில் சாப்பிட்டு பணம் பறித்த கும்பல் தப்பி ஒட்டம்
    • உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.

    அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரியவந்தது. அவர்கள் 6பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவிடம் ஒப்படைத்தனர்.
    • நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று முன்தினம் 2 ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளகோவில் கோவை ரோட்டில் சோழா ஓட்டல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நிர்வாகத்தினர், கோழி கழிவுகளை குமாரவலசு என்ற பகுதியில் போட்டுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவி மு. கனியரசியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.சரவணன் கோழிக்கழிவு கொட்டிய சோழா ஓட்டல் நிர்வாகத்திடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹோட்டல் திறக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் யாரேனும் குப்பைகளை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை விதியின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர மன்ற தலைவி மு. கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் தெரிவித்துள்ளனர்.

    • ஓட்டலை சுத்தம் செய்த போது 5 பவுன் தங்க நகை கீழே கிடந்தது
    • நேர்மையுடன் செயல்பட்ட பெண் ஊழியருக்கு பாராட்டு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஜவகர் தெருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 28-ம் தேதி ஒரு குடும்பத்தினர் சாப்பிட வந்தனர். அவர்கள் சென்ற பின்னர் ஓட்டலை சுத்தம் செய்த போது 5 பவுன் தங்க நகை கீழே கிடந்தது.

    இதை பார்த்த ஓட்டல் பெண் ஊழியர், நகையை எடுத்து உரிமையாளர் சேகரிடம் கொடுத்தார். அவரும் வக்கீல் ஹரிகுமாரும் அந்த நகையை நேசமணி நகர் போலீசில் ஒப்படை த்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் மேல ராமன்புதூரை சேர்ந்த கோபிநாதன் (வயது 75) என்பவர் தான் குடும்பத்தோடு ஓட்டலில் சாப்பிட வந்தபோது நகையை தவறவிட்டவர் என தெரியவந்தது.

    அவர் உரிய ஆதாரங்கள் காண்பித்ததால், இன்று நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நகையை கோபிநாதனிடம் ஒப்படைத்தார்.

    மேலும் நகையை எடுத்துக் கொடுத்த ஓட்டல் உரிமையாளர் சேகருக்கும்,அவருடன் வந்த வக்கீல் ஹரிகுமாருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண் ஊழியரை சந்தித்து, கோபி நாதன் நன்றி கூறினார்.

    ×