என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்கிலி பறிப்பு"
- மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
- முகவரி கேட்பது போல் நடித்து
பெரம்பலூர்:
குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை இலுப்பைக்குடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம ஆசாமி ஒருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அகிலாண்டம் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்மநபர் ஒருவர் ராதாமணியிடம் முகவரி கேட்பது போல நடித்து சங்கிலியை பறித்தார்.
- ராதாமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை இருகூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி ராதாமணி (வயது 65). இவர்கள் வீட்டிலேயே திண்பண்டங்கள் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று அவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்டுள்ளார். ராதாமணியும் அவரிடம் முகவரி சொல்லி கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த அந்த நபர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வருவதற்குள் மர்ம நபர் ஏற்கனவே தயாராயிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பிரேமா (56). சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செயினை பிடித்து இழுக்க பாதி செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.
- இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 74), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இவரது மனைவி மனோன்மணி (70). நேற்று மாலை வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த போது பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.
இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- கறம்பக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறித்தனர்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் காத்தான் மனைவி ராமாமிர்தம் (வயது63). இவர் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது நெய்வேலி விளக்கு சாலையில் நடந்து வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் நிலை தடு மாறிய மூதாட்டி சுதாரித்து சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த மர்ம நபர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலி பறித்த நபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோழியின் வீட்டில் தூங்கிய போது சம்பவம்
- போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு பிள்ளையார் கோவில் எதிர்புறத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா(வயது 38). சத்தியபாமாவின் கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியபாமா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தோழியான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரின் மனைவி சத்யா(31) என்பவர் எறையூரில் உள்ள தோழியை பார்ப்பதற்காக தனது மகனுடன் சத்தியபாமா வீட்டிற்கு வந்து கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார். இரவு சத்யா வீட்டின் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சத்யா கழுத்தில் கிடந்த ¾ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.
- 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகேயுள்ள கருக்கஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 50). இவர் தேங்காய் நார் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த முனிராஜ் (48) என்ற விவசாயி ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த முனிராஜை வழிமறித்த முனிரத்தினம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து தாக்கி முனிராஜ் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து முனிராஜ் தந்த புகாரின் பேரில் காவேரிபட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராஜசேகரன் (35) ஓட்டுநர். இவரது மனைவி ஜெயா (33). மகள் சுபாஷினி (11). சம்பவத்தன்று ராஜசேகரன் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு ஜெயா தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஜெயா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளனர். இதில் திடீக்கிட்டு எழுந்த ஜெயா தனது அருகில் முகத்தை மூடியவாறு 4 பேர் டவுசருடன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சத்தம் போட டவுசர் கொள்ளையர்கள் ஜெயாவின் வாயை பொத்தி பிடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு முன்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக அதே பகுதியில் தனியார் கூரியர் ஓட்டுநர் கமலகாந்தன் என்பவரின் மனைவி பணிமலர் (37) மகள் சிவாணி(4) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களது வீட்டிலும் திருட சென்ற நிலையில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த டவுசர் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், செக் புக் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை தண்ணீரில் முக்கி வெளியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுசர் கொள்ளையர்கள் திருடுவதற்கு முன்பாக வீட்டில் இருந்த சொம்பில் மதுபானத்தை ஊற்றி குடித்துவிட்டு ஆற அமர திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
- பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஸ்கூட்டரில் சென்ற போது சம்பவம்
பெரம்பலூர்
பெரம்பலூர் முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 40). இவர் நேற்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள தனது நிலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் தனியார் கல்லூரியின் மகளிர் விடுதி அருகே சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லலிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஜெயங்கொண்டத்தில் வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பினார். பின்னர் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு புதுக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக மழையில் நனைந்தவாறு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பானுப்பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா சத்தம் போட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்."
- பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து துணிகரம்
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார்.
அந்த பங்க் கடைக்கு பைக்கில் 2 பேர் வந்தனர். அப்போது மகேஸ்வரியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்தனர்.
அவர் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மின்னல் வேகத்தில் பைக்கில் 2 மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மகேஸ்வரி அவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் மீனவத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 48). நேற்று காலை சாந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அபராத ரட்சகர் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் சாந்தியை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீெரன சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சங்கிலியை கைகளால் பற்றிக் கொண்டதால் சங்கிலி அறுந்து 3¼ பவுன் மர்ம நபர்கள் கையில் சிக்கியது.2 பவுன் கீழே விழுந்தது. அதனை சாந்தி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் சாந்தியை அந்த மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சாந்திக்கு காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
- வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் மனைவி செல்லம்மாள் (வயது75). இவர் நேற்று அதிகாலை வீட்டு முன் வாசல் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நடந்து சென்ற அடையாளம் தெரியாத மர்மநபர், செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து மாயனூர் போலீசில் செல்லம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமரா பதிவுகளில் சங்கிலியைப் பறித்து சென்ற நபரின் உருவம் பதிவாகி உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்