என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் விடுதலை"
- ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
- விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.
ராமேசுவரம்:
கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.
இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
- ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
- காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), அந்தோணி ஆரோன் உள்பட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
பின்னர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அந்த மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 14 பேரில் 12 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருகிற 28-ந்தேதி முதல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கைதானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
- சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.
சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 6-ந் தேதி இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது தட்பவெட்ப நிலை காரணமாக படகு முல்லை தீவு பகுதியில் ஒதுங்கியது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் படகுடன் கைது செய்தனர்.
இவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கோர்ட்டு உத்தரவுபடி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபற்றி புதுவை மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
- கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த 12 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 12 மீனவர்களும் இலங்கை திரிகோண மலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
- மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
- வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் 11-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவார கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது சக மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலையற்ற அரசு நீடிக்கிறது. வன்முறை, போராட்டம் என கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மீதான வழக்கு இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 11 மீனவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நெடுந்தீவு அருகே கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மீனவர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
- வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர்.
தஞ்சாவூர்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேட்டை சேர்ந்த கணேசன் (வயது 52), வைத்தியநாதன் , ராமன் உள்ளிட்ட 5 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரா (27), தினேஷ் (26), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (44), விக்னேஷ் (22), ஜெகதீஸ் , சந்தீஸ்குமார், பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த 1-ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர்.
மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கட்சி தலைவர்களும் உடனடியாக தமிழக மீனவர்களை விடுதறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று மதியம் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தனர்.
இதையடுத்து விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர். அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வர்.
மீனவர்கள் விடுதலையானதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.