என் மலர்
நீங்கள் தேடியது "நலத்திட்ட பணிகள்"
- சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- கல்லல் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பாதரக்குடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம், கீழ பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கண்டன மாணிக்கம் ஊராட்சியில் 2021-22-ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மீனா அழகப்பன், கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கார்த்திகேயன், கண்டரமாணிக்கம் ஊராட்சி வளர்ச்சி குழு தலைவர் கே.ஆர்.மணிகண்டன், ஊரக முகமை, வருவாய் துறை அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்.
- எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- ஆய்வின்போது ஊராட்சி தலைவர் செங்கேணி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அங்குள்ள பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இன்று அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். ஊராட்சி தலைவர் செங்கேணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குன்றத்தூர், வெங்கம்பாக்கம் பகுதிகளுக்கு சென்று மத்திய, மாநில அரசு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
- 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
- அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.22.46 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகள் தொடங்கபட்டது
- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.22.46 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனி அருகில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பீட்டில் கீழப்புலியூர் சிலோன் காலனி முதல் சிறுகுடல் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், நமையூர் கிழக்கு தெரு, முருக்கன்குடி பேருந்து நிலையம் அருகில் (பொன்னகரம் காலனி தெரு) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுமத்தூர் முன்னுரிமை பணிகளையும், நோவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை நோவா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பென்னகோணம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பென்னக்கோணம் தேரோடும் வீதியில் (வடக்கு வீதி) தார்சாலை அமைக்கும் பணியினையும், நன்னை பேருந்து நிலையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நன்னை கிளியூர் தார்சாலையை அமைக்கும் பணியினையும், மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.6.54 கோடி மதிப்பீட்டில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கோவிந்தராஜபட்டிணம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் நபார்டு – 28 திட்டத்தின் மூலம் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கோவிந்தராஜபட்டிணம் முதல் கைப்பெரம்பலூர் வரை ஆற்றுப்பாலம் அமைக்கும் பணியினையும், வீரமநல்லூர் ஏரிக்கரை அருகில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியினையும், கீழப்பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும்,கீழப்பெரம்பலூர் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் ஜெய்குமார் கடை முதல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் – அரியலூர் ரோடு பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் அகரம்சீகூர் மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் 22.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி முத்தமிழ்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், கீழ பெரம்பலூர் சத்யா காமராஜ், நன்னை சின்னு, அகரம்சீகூர் முத்தமிழ் செல்வன் துணை தலைவர் இந்துமதி தர்மராஜ் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
- பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நலத்திட்ட பணிகளை திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூர் வக்கீல் குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகர மன்ற முன்னாள் தலைவர் பி.ஏ. சேகர், நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாச்சலமூர்த்தி, செயலாளர் சுரேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், துரைமுருகன், அன்பரசன், பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
- முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.
மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் 2-வது கோடி பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம்பாள் என்ப வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 கோடியே ஒன்னாவது பயனாளியான வசந்தா என்பவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.
இதைத்தொடர்ந்து காளிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மஹாலில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முத்து மஹாலில் நடைபெற்ற மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திர குமார் இல்ல திருமண வர வேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்து சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகை சென்று இரவில் ஓய்வெடுத்தார்.
அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்றார். அவருக்கு சாலை இருபுறங்களிலும் இருந்து மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டம் சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதேபோல் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைத்தார்.
நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்திய மங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் ஊர்வசி சிலை என மாவட்ட முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதேபோல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்ட முழுவதும் ரூ.133 கோடியே 41 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்வாறு ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.
இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.