search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணத்தகராறு"

    • 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் (வயது 39). என்பவர் தனது தாய், சகோரர்கள் 2 பேர் சேர்ந்து 30 வருடங்களுக்கு பிறகு தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாபி சிங்கிற்கு பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற சகோரர்கள் உள்ளனர். கடந்த ஜூலை 1-ந் தேதி சகோதரர்களிடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகிய இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அப்போது 1994-ம் ஆண்டு தந்தையை கொலை செய்தது போலேவே உன்னையும் கொன்று தந்தையிடம் அனுப்புவோம் என மிரட்டியுள்ளனர்.

    இதைக்கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறுவனாக இருந்த போது தன் கண் முன்பு தனது தந்தை புத்தசிங்கை தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்துள்ளது. அதாவது 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி ஊர்மிளாதேவியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதுதொடர்பாக புத்தசிங் தனது மனைவியை கண்டித்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார். நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபிசிங் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஊர்மிளாதேவியும், அவரது மகன்களான பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து புத்தசிங்கை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதைக்கண்ட ஊர்மிளா தேவி, முகேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோர் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என பஞ்சாபிசிங்கை மிரட்டி உள்ளனர்.

    இதனால் பஞ்சாபிசிங் அமைதியாக இருந்து விட்டார். காலங்கள் கடந்த நிலையில் தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு தாயும், 2 சகோதரர்களும் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ததை பஞ்சாபிசிங் போலீசில் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர். அப்போது அங்கிருந்து ஒரு மனித எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.
    • சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • ளியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் குறுமத்தூர் பகுதியை சார்ந்த பிறசோபன் என்பவருக்கு பணம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று பிறசோபன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    இதில் 2 பேருக்கும் தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பிறசோபன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலும், ராஜேஷ் குழித்துறை ஆஸ்பத்திரியிலும்,சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்கள் கொடுத்த புகாரின்அடிப்படையில் களியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே பண தகராறில் வாலிபர் கடத்தப்பட்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்நத பாண்டித்துரை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வைரமுத்துவின் மகன் முத்துக்குமார் (19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை, பாண்டித்துரை, மாரி, அலர்ட் ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் தாக்கியதுடன் அவரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கருப்பசாமி, வைரமுத்துவுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கடத்திச்சென்ற பாண்டித்துரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் மீது வழக்கு
    • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காபட்டணம் பகுதி வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 57). இவரது தம்பி ராஜன். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சம்பவ தினம் விஜயகுமாரை அவரது தம்பி ராஜன் அவரது மனைவி பிரிடா மேரி ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த விஜயகுமார் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது போன்று விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஜாஸ்மின் சுபலா சேர்ந்து ராஜனை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ராஜன் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×