என் மலர்
நீங்கள் தேடியது "நீட்டிப்பு"
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
- ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி அந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிடிருந்தார்.
இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையானது ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றைக்கு முடிவடைந்ததையடுத்து, அவரது நீதிமன்ற காவலையும் ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது.
- ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்' என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காணொலிமூலம் சென்னை முதன்மை அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்தனர். விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
- மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை இன்று நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளி வைக்க முடியாது எனக் கூறி செந்தில்பாலாஜி மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில், அவகாசம் கோரப்படுகிறது என ED தரப்பு தனது வாதத்தை வைத்துள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
- சிறப்பு ரெயில்களை திருநெல்வேலியுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
நாகர்கோவில்:
ஆயுத பூஜை, பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் இயக்க ப்படும் சிறப்பு ரெயில்கள் குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் சங்கம் தெரிவிக்கிறது.
மேலும் ரெயில்களை நாகர்கோவில் வரை இயக்க முடியாததற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் ரெயில் நிலையம் இட நெருக்கடி பிரச்சினையால் சிக்கி இருப்பது தான் என்றும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பயணி கள் நல சங்கத்தினர் கூறு கையில், நாகர்கோவி லிருந்து அதிக அளவிலான ரெயில்கள் கேரளா வழியாக, அதாவது திருவனந்த புரம் மார்க்கம் இயங்கு கின்றன. இதனால் தான் இட நெருக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து ரெயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிறப்பு ரெயில்களை திருநெல்வேலி யுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய இட நெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக சென்னை - கொல்லம் அனந்தபுரி ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட இருக்கின்றது. மேலும் ஒரு சில ரெயில் களை, குறிப்பாக பயணி கள் ரெயில்களை நாகர் கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்கி னால் நாகர்கோவில் சந்திப்பு நிலைய இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும் என்ற ஆலோசனையும் ரெயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இயக்கும் போது தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை உள்ளது போன்று, பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை வசதி கிடைக்கும்.
திருவனந்தபுரத்திலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்ப ட்டு நாகர்கோவிலுக்கு 8.45 மணிக்கு வந்து சேரும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுன் வழி யாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரெயில் தான் நாகர்கோவில் விட்டு விட்டு கோட்டயம் ரெயி லாக மதியம் புறப்பட்டு செல்கிறது.
திருநெல்வேலி யிலிருந்து கோட்டயம் ரெயில், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் போது காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தினசரி ஒரு நடை மேடை காலியாக கிடைக்கும். காலையில் நடை மேடை காலியாக இருந்தால் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் ஒரு சில சிறப்பு ரெயில்களை நாகர் கோவிலிருந்து இயக்க முடியும்.
2-வது கோரிக்கையாக திருநெல்வேலியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 8.10 மணிக்கு வரும் பயணிகள் ரெயிலையும், நாகர்கோவிலில் இருந்து 7.55 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி -கொச்சுவேலி என நாகர் கோவில் டவுன் வழியாக இயக்கலாம்.
திருவனந்தபுரத்திலிருந்து மாலையில் புறப்படும் பயணிகள் ரெயிலையும் நாகர்கோவிலில் இருந்து மாலையில் திருநெல்வேலி புறப்படும் பயணிகள் ரெயி லையும் இணைத்து ஒரே ரெயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணி கள் ரெயில் என்று இயக்க வேண்டும்.
கொச்சுவேலியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தும் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.
இவ்வாறு பயணிகள் ரெயில்களை மாற்றம் செய்து இயக்கும் போது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யம் இட நெருக்கடி பிரச்சினைகளிலிருந்து விடிவு பெற்று விடும்.
இவ்வாறு இடநெருக்கடி பிரச்சினை இல்லாமல் இருந்தால் நாகர்கோவிலுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரெயில்களை அதிக அளவில் இயக்கலாம் என்றனர்.
- மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.
மதுரை
மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ், மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ஆகிய இரண்டையும் இணைத்து, ஒரே ெரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடு துறையில் இருந்து அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை செல்லும். இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடை க்கானல் ரோடு, மதுரை, திருப்ப ரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபா ளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசியில் நின்று செல்லும்.
- திங்கட்கிழமை தோறும் செல்லும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மதுரை
திருநெல்வேலி-தாம் பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்.06004). இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
மேலும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதி களிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதி களிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதி களிலும் இயக்கப்படும். இந்த ரெயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம் பரம் வந்து சேரும்.
இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் புறப்பட்டு மறு நாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடை கிறது.
இந்த ரெயில் வருகிற 19, 26, அக்டோபர் மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதியிலும் நவம்பர் மாதம் 7, 14, 21, 28 தேதியிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் தொடங்குவதாக அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.
தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரெயிலில் முன் பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணிக்கலாம். எழும்பூரில் இருந்து புறப் படக்கூடிய ரெயில்களில் இடம் நெருக்கடி இருக்கின்ற நிலையில் சிறப்பு ரெயில் வசதியை பயன்படுத்தலாம்.
- நெல்லை - மேட்டுப்பாளையம்ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரெயில் சேவையை வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 2-ந் தேதி முதல் ஜனவரி 27-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு நெல்லை செல்லும்.
இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவையில் நின்று செல்லும். நெல்லையில் இருந்து செல்லும் ரெயில், போத்தனூரிலும் நிற்கும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- மதுரை - செகந்திராபாத் ெரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில், ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் சேவை, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி செகந்திரா–பாத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.
இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணா–மலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.
மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது.
- விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது.
சேலம்:
இந்திய அரசின் சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் முதுநிலை பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்றும், அவர்களின் நலன் கருதியும் நெட் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்பு செய்து, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை மறுநாள் (17-ந்தேதி) கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தகவலை இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
- அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
- விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாபகுதிகளில் 01.01.2011 -ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப் படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.