என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசுதேவநல்லூர்"

    • கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    • வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.

    தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.

    தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.

    வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளிலும் உள்ள அடிப்படை மற்றும் அவசர பணிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, தீர்மானத்தில் ஏற்றப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று பேசினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணா தேவி பாலசுப்பிரமணியன், விஜய பாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், உதவி பொறியாளர் அருள் நாராயணன், மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர் சிலம்பரசன், அரசு ஒப்பந்ததாரர் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சேவா சங்கத்தின் செயலாளர் குருசாமி பாண்டியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, அருண்குமார், கவிதா, குருவம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    • சமத்துவ பொங்கல் விழாவை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
    • விழாவில் மாணவ- மாணவிகள் பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் பாரதி, எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதற்கான நோக்கம் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். இவ்விழாவை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவ- மாணவிகள் சிறப்பு ரங்கோலி கோலமிட்டு, இனிய பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கரும்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

    • அய்யாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
    • மண் மாதிரி எடுத்தல், அதன் பயன்கள் குறித்து மாணவிகள் விளக்கினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து மண் மாதிரி எடுத்தல் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    • பட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தார்சாலை அமைக்கும் பணியினை பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்நாரயணன், ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லில்லிபுஷ்பம், கிளை செயலாளர்கள் அரியூர் முருகையா, பட்டக்குறிச்சி சத்தியராஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி ஆலையின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வட்டியுடன் வழங்கிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வீதம் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் ஆலையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தரணி சர்க்கரை ஆலையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாய சங்கத்தின் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வேலு, ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இசக்கிதுரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வேலாயுதம், ஏ.ஐ.டி.யு.சி. தென்காசி மாவட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், ராமநாதபுரம் ரவிக்குமார், சண்முக வடிவு மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 4 பேரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாரியம்மன் கோவில் அருகே கலைஞர் காலனியை சேர்ந்த சுடலை ராஜ் (வயது 42) மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (30), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (21), கடையநல்லூர் மலையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் ஆகிய 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

    கைது

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் 600 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு ஜியோ இன்போ மீடியா நிறுவன நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பணிநியமன ஆணையை வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சிவில் மாணவர்களுக்கு நேற்று கல்லூரியில் வளாகத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையிலுள்ள ஜியோ இன்போ மீடியா கம்பெனி கலந்துகொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி குழுமத்தின் முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். ஜியோ இன்போ மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். வளாகத்தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துதுறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திற்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்ரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், ஓவர்சீஸ் ராமசாமி, முத்துமாரி, அலுவலர்கள், பணியாளர்கள், சிலம்பரசன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனி கலந்து கொண்டு வளாகத்தேர்வை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனியின் மனிதவள அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் விவேக் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    • சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் ராம்குமார் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

    சிவகிரி:

    அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவரும், வக்கீலும், மண்டல் தலைவருமான ராம்குமார் தலைமையில் வாசுதேவ நல்லூரில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொது செயலாளர்கள் மகாலிங்கம், தினேஷ், பொருளாளர் கங்காதரன், ராமச்சந்திரன், முருகன், சாமி, பால்ராஜ், ரவி, முத்தமிழ்செல்வம், சங்கர், பண்டாரம், செல்வ கணேசன், இசக்கி, சர வணன், தங்க ராஜ், கவியரசு, வாஜ்பாய் முரு கன், மாரி யப்பன், செல்வம், குரு சாமி, கணே சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    இதேபோல் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி மற்றும் சிவகிரி நகர காங் கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் அவரது சிலைக்கு முன்பாக அலங்க ரித்து வைக்க ப்பட்டி ருந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கணேசன், நகர தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவர் அசோக், நிர்வாகிகள் நாட்டாண்மை மாணி க்கம், சந்திரன், பிச்சை மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர செயலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார்.

    ×