என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளக்க கூட்டம்"
- மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க சார்பில் ஆகஸ்ட் 9 ம் தேதி வெள்ளையனே வெளியேறு நாளில் கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து பெருந்திரள் தொடர் அமர்வு போராட்ட விளக்க கூட்டம் எண்ணூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 14 அம்சகோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுவதை முன்னிட்டு மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு , ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிஐடியு விநாயகமூர்த்தி, கதிர்வேல், ஏ ஐ டி யு சி பார்த்திபன், பாலன், ஐ என் டி யு சி, தாமோதரன், சி ஐ டி யு, பாண்டியன், ஆகியோர் விளக்க உரையாற்றினர் சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் விஜயன், ஏ ஐ டி யு சி, மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் பி.ஜி. பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி பொறி செய்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.
- அப்போது பயிர் சாகுபடி ெசய்வது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் குப்பிரிக்காபாளையம் ஊராட்சியில் தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் பி.ஜி. பி வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி பொறி செய்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது.
அப்போது பயிர் சாகுபடி ெசய்வது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கினர். அதில் ஏற்படும் இழப்பீடுகள், வருமானம் குறித்தும் தெரிவித்தனர். இதில், உதவி வேளாண் அலுவலர் சந்திரசேகரன், கிராம நிர்வாக அலுவலர் கஜலட்சுமி மற்றும் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் வேளாண் மாணவர்களுக்கு சூரிய ஒளி விளக்கு பொறியின் பயன்களை கூறி செய்முறை விளக்கம் அளித்தனர்.
- இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
- ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இணைந்து ''இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு'' குறித்த விளக்க கூட்டத்தை நடத்தியது.
சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் பாபா அமீர் பாதுஷா முன்னிலை வகித்தார். மதரசா ஆசிரியர் மவுலானா ஷேக் பாசில் யூசுப் கிராஅத் ஓதினார். மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளி மவுலானா முஹம்மது சிராஜுதீன் கீதம் பாடினார், இமாம் ஹிதாயா ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலானா நூருல் அஜீம் மிப்தாஹி தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் வட்டார உலாமா சபை தலைவர் மவுலானா சையது முகமது இல்ஹாமி வரவேற்றார்.
திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, தாருல் உலூம் தாவத்துல் ஹூதா மதரஸா தலைமை ஆசிரியர் மவுலானா மவுலவி முஹம்மது ஆதில் தாவூதி, கவிஞர் பாரதன், சிவகங்கை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலானா முஹம்மது ரிலா பாக்கவி ஆகியோர் ஆகியோர் பேசினர். மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.
- ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
- அரசுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்,
தருமபுரி,
தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில்15 -வது மாநில மாநாட்டு தீர்மான விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், அரசுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம் என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் முரளி வரவேற்புரை ஆற்றினார். மண்டல பொருளாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்