என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலையத்தில்"
- அறுவை சிகிச்சை அரங்கத்தை உடனே சீரமைக்க உத்தரவு
- பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும்.
கன்னியாகுமரி:
தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று இரவு கார் மூலம் கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ. அருள், நாமக்கல் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர்கள் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலையில் இந்த குழுவினர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைக்கு சென்று "திடீர்" ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, பெண் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். அங்கு தற்போது பரவி வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் உள்ளனரா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். உள்நோயாளிகள் வார்டில் உள்ள ஜன்னல்களில் கொசு வலைகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு இந்த குழுவினர் கன்னியாகுமரியில் பாழடைந்து கிடக்கும் புதிய பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த குழுவினர் அந்த பஸ்நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் தேங்காய்பட்டணத்தில் ரூ.253 கோடி செலவில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகளை இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜா, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரிதுரை, மருத்துவத்துறை இயக்குனர் பிரகலாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை. இங்கு வருகிற நோயாளிகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் அளிப்பதன் அடிப்படையில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்தின் மோசமான தன்மையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் உள்ளனர். சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் ஆஸ்பத்திரி சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனவர்கள் அவசர தேவைக்கு வருகின்றபோது மருத்துவர்கள் பணியில் இருந்து பணியாற்ற வேண்டும். வட்டார தலைமை மருத்துவமனை யில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கன்னியாகுமரி பஸ் நிலையம் மிக மோசமான நிலையில் உள்ளதாக புகார் வந்துள்ளது. பஸ் நிலையயத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப் பட்டு வருகிறது.
- டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாகர்கோவில் : நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் நெல்லை யிலிருந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் செல்வதற்கு டவுன் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தற்பொழுது ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.
தற்பொழுது நுழைவு வாயிலில் மேல்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத கம்பிகள் அமைக்கப்பட்டு கூரை அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டவுன் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட் பாரங்கள் அமைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 3-வது பிளாட்பா ரம் அமைப்ப தற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 1-வது பிளாட் பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பா ரத்திற்கு பொது மக்கள் செல்ல வசதியாக லிப்ட் வசதி அமைப்பதற்கு ஏற்கனவே டெண்டர் பிறப் பிக்கப்பட் டுள்ளது.
ரெயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே உள் ளது. கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ள னர். இது குறித்து ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அங்கு பொதுமக்கள், பயணி களுக்கு தேவையான அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
ரெயில் நிலைய பகுதி களில் போதுமான தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. பொதுமக்கள் பஸ்கள் இல்லாமல் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் நலன்கருதி கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ள தாக இருக்கும் என்றார்.
- மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.
மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.
- வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு,
தமிழகத்தில் பள்ளிக ளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த தால் பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதனையேற்று ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனையேற்று 2-வது முறையாக பள்ளி தேதி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 14-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்று இரவு முதலே மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொலைதூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் முன்பதிவு நிரம்பிவிட்டன.
இதனையடுத்து வெளியூரில் இருந்து ஈரோடுக்கு வரும் மக்கள் சிரமம் இன்றி வருவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.
இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையங்க ளிலும் கடந்த 2 நாட்களாக பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றன. வெளியூர் சென்றவர்கள் குடும்பம், குடும்பமாக மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வரத் தொடங்கி யுள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் போடா போட்டி போட்டனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும் அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பள்ளி திறப்பையொட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் போன்ற பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு புதிய புத்தகப்பை, நோட்டுகள், எழுதுப்பொருட்கள் வாங்க குவிந்தனர். இதேபோல் ஷூ, பெல்ட் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பையொட்டி ஏற்கனவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
- அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமாரி:
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.
இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்டவரை உடனடியாக கைது செய்யவேண்டும்.
- பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
பரமத்திவேலூர்:
சமூக ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்ட விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், ஒழிந்தியாம்பட்டைச் சேர்ந்த சக்திவேல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு தலைவர் சுபாஷ் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
அப்போது பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேலு, மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரபு, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் மற்றும் பா.ஜ.க வின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்