என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசு கட்டுப்பாட்டு வாரியம்"

    • ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
    • கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருகாலூர் ஊராட்சி, செல்லப்பம்பட்டி கிராமம் கல்லேரியில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் மீன்பிடிக்க குத்தகை ஏலம் விடப்பட்டது.

    மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன்களுக்கு இரையாக கழிவுகளை ஏரியில் கொட்டி மீன் பிடித்து வந்ததாகவும், இதனால் ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனையடுத்து, சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மீன்பிடிதாரரர்கள் கழிவுகளை ஏரியில் கொட்ட கூடாது எனவும், மேலும், விவசாய கிணறு, ஏரி தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்து அதில் தண்ணீர் மாசு அடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர்.

    அதன்படி, நேற்று சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜய்கோகுல் தலைமையிலான குழுவினர் கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    இந்த ஆய்வின் போது, சங்ககிரி பி.டி.ஓ. முத்து, சேலம் மாவட்ட மீன்வள ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி, ஆர்.ஐ. குணசீலன், வி.ஏ.ஓ சித்ரா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
    • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

    கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த மாதம் 17-ந் தேதி தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவின் பேரில் தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அப்போது ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் அடைத்து பயன்படுத்திய பிளாஸ்டிக் பெட்டிகள், வெண்ணெய்டப்பாக்கள், பால் பாக்கெட்டுகள், சேத மடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஐஸ்கிரீம் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சுமார் 150 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பால் பண்ணை வளாகத்துக்குள் 4 இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    பால்பண்ணையில் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் மூடிய கழிவு சேகரிப்பு கிடங்கு கிடப்பதாகவும் 5 ஆயிரம் சதுர அடி திறந்தவெளி பரப்பளவில் கழிவுகள் சேமிக்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தரப்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை நவீன முறையில் தினமும் கையாள்வதற்கு பேலிங் போன்ற முறைகளை கடைபிடிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
    • குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

    • கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்படுகின்றன.
    • இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்ட்டாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதி இருக்கிறது.

    அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.

    • சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டது. அப்போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்தது. 

    • ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
    • நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்தது.

    தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து பழைய பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.எனவே, இந்த ஆண்டும் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
    • உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.

    அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    ×