என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனநலம் பாதிப்பு"
- குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
- கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.
அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.
கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.
சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
- உடனடியாக தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை முனுசாமியை அழைத்து கொண்டு இளவரசன் கோவைக்கு வந்தார்.
- உதவும் கரங்கள் அமைப்பின் உதவியால் எனது மனைவி குணம் அடைந்து இருக்கிறார். அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை.
கோவை:
செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்மராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.
ராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார்.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசிலும் ராணியை கண்டுபிடித்து தரகோரி அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் மாயமான ராணியை தேடி பார்த்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே உறவினர்கள் நினைத்திருந்தனர். இருந்த போதிலும் முனுசாமியும், அவர்களது மகன்களும் ராணி உயிரோடு தான் இருப்பார்.
என்றாவது ஒருநாள் தங்களை தேடி வருவார் என நினைத்து காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பு வீண்போகவில்லை. அவர்கள் நினைத்தது போலவே ராணி உயிரோடு தான் இருந்தார்.
சம்பவத்தன்று முனுசாமி மகன் இளவரசனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் நாங்கள் கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து பேசுகிறோம். உங்கள் தாய் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் சுற்றி திரிந்தபோது, அவரை மீட்டு நாங்கள் மனநல சிகிச்சை அளித்தோம்.
குணம் அடைந்த அவரிடம் விசாரித்தபோது உங்கள் பெயரை தெரிவித்து, உங்களை சந்தித்து, உங்களுடன் செல்ல விரும்புகிறார் என்ற தகவலை தெரிவித்தனர்.
மாயமான தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்ததும் இளவரசன் மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை முனுசாமியை அழைத்து கொண்டு இளவரசன் கோவைக்கு வந்தார்.
நேராக அந்த மையத்திற்கு சென்ற 2 பேரும், ராணி குணம் அடைந்து நல்ல நிலையில் இருப்பதை பார்த்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ராணியை பார்த்த சந்தோஷத்தில் முனுசாமியும், அவரது மகனும் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
மேலும் தன் மனைவிக்கு உண்ண உணவு, தங்க இடம் கொடுத்தது மட்டுமின்றி மனநல சிகிச்சை அளித்த உதவும் கரங்கள் அமைப்புக்கு முனுசாமி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
இதுகுறித்து ராணியின் கணவர் முனுசாமி கூறியதாவது:-
12 வருடங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ராணி திடீரென காணாமல் போய்விட்டார்.
பல இடங்களில் தேடியும், போலீசில் புகார் அளித்தும் கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் இருந்தோம்.
தற்போது உதவும் கரங்கள் அமைப்பின் உதவியால் எனது மனைவி குணம் அடைந்து இருக்கிறார். அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் ராணி அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது கணவர் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
- கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
- வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி. மகள் துர்கா பவானி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து சூரியபாபு மட்டும் வேலைக்கு சென்று வந்தார்.
ஆனால் சூரியபாபுவின் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தனர். தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்தார்.
ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சூரியபாபு தெரிவித்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சூரியபாபு வீட்டிற்கு வந்து தாயும், மகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர்.
அப்போது அவர்கள் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- நிலம் அளக்க முயன்ற போது அப்பகுதியில் முகம் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
- அவர் கடந்த சில நாட்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்த துயரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்காடு:
ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அளவையர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு டிப்ரவரி சாலையில் உள்ள மலை உச்சிக்கு சென்றனர்.
நிலம் அளக்க முயன்ற போது அப்பகுதியில் முகம் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் கொண்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது உடைமைகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்காடு பட்டிப்பாடி நீடூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தம்பிராஜா (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்த துயரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தம்பிராஜா எதற்காக வனப்பகுதிக்கு சென்றார்? அவர் எப்படி இறந்தார்? தற்கொலை செய்தாரா அல்லது கொலைசெய்யப்பட்டாரா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தம்பிராஜா சாவில் மர்மம் நீடிக்கிறது.
- சின்னசேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயமானார்.
- தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாய் ஜோதி என்கின்ற பழனியம்மாள் (வயது 67), தந்தை இருவரும் மேலூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேசின் தாய் பழனியம்மாள் மூதாட்டி மாயமானார். இவர் கடந்த 30 வருடங்க ளாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படு கின்றது. பிறகு தாய் மாயமான தகவல் ரமேஷுக்கு தெரிவிக்க ப்பட்டு அவர் மேலூர் கிராமத்திற்கு வந்தார்.தன்னுடைய தாயை பல இடங்களில் தேடிப் பார்த்தார் எங்கும் கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் தன்னுடைய தாயை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்தார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
- கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உடுமலை :
உடுமலையை அடுத்த மூங்கில் தொழுவு பகுதியைச்சேர்ந்தவர் கணேஷ்(வயது55). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணின் 24 வயது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
தாயுடன் அடிக்கடி தோட்டத்துக்கு வந்துள்ளார்.அப்போது கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சம்பவம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட டாக்டர்கள் அது குறித்து உடுமலை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்