search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் ஊழியர்"

    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது 26).இவர், இரவி புதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி பறவை இறந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சப்ளை பாதிக்கப்பட் டது. அதை சரி செய்ய நேற்றிரவு ஏசுராஜன் சென்றார்.

    டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஏசுராஜன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகா யம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏசுராஜ னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏசுராஜன் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அவரது தாய் கனகம் மற்றும் அவரது உறவினர்கள் ஏசுராஜன் உடல் வைக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். தனது மகன் சாவு குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.

    மின்வாரியத்தின் அலட்சி யத்தால் தனது மகன் பரிதாபமாக இறந்து விட்டான் என்று அவர் புகார் கூறினார். அவரது புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது மகன் பணியில் சேர்ந்து 6 மாதமே ஆகிறது. முன் அனுபவம் இல்லாத அவனை மின்மாற்றியில் ஏற எப்படி அனுமதித்தார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான். ஆகவே எனது மகனின் மரணத்திற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
    • தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ருக்குமணி 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முரு கன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். பாஸ்கர் குடும்பத்துடன் புதுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    இன்று காலை சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்த நிலையில் சுப்பிர மணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி சுப்பிரமணியின் மகன்க ளுக்கும், நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மர்ம நபர்கள் கட்டில் சட்டத்தால் தாக்கி சுப்பிரமணியை கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? சுப்பிர மணிக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம், பகை உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தது. யாரயும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கேயே மயங்கி தண்ணீர் குழாய் மீது விழுந்து கிடந்தார்
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே அழகன்பாறை குன்னங் காடை சேர்ந்தவர் சிவன் (வயது 54).

    இவர் தக்கலை அருகே மூலச்சல் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை சிவன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் வழக்கம்போல் மருந்து வாங்கும் தனியார் மருத்துமனைக்கு சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. அதனால் மாலை மருந்து வாங்கலாம் என வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார்.

    இந்நிலையில் மதியம் குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கேயே மயங்கி தண்ணீர் குழாய் மீது விழுந்து கிடந்தார். அவரது சப்தம் கேட்டு வீட்டினர் குளியலறைக்கு சென்று, அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி விஜி (48) மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நகையை விட்டு விட்டு பணத்தை மட்டும் எடுத்துச் சென்ற கொள்ளையன்
    • தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள பெருமாள்புரம் கன்னி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 56). இவர் செண்பகராமன்புதூர் துணை மின்நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனும் மகளும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு பால கிருஷ்ணன் மனைவி உமா வுடன் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் உள்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்கள் பார்த்து உள்ளனர். இது பற்றி அவர்கள் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த யாரோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பாலகிருஷ்ணன் உடனடி யாக ஊர் திரும்பினார். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் மேசையில் இருந்த 25 ஆயிரம் ரூபாயில் ரூ.10 ஆயிரம் மட்டும் எடுத்துச் சென்றிருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார்.

    மேலும் பணத்தின் அருகில் இருந்த தங்கநகைகளை கொள்ளையன் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நூதன முறையில் நடந்த இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதியில் ஏற்கனவே பைக் திருட்டு உள்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது மீண்டும் மின்வாரிய அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டவுன் டி.எஸ்.பி. மற்றும் அதிகா ரிகள் வந்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தில் பாதி மற்றும் நகையை விட்டு விட்டு கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரத்தில் துணிகர சம்பவம், மின் ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • மகளை பார்ப்பதற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை-தேசிய நெடுஞ்சா–லையில் சலாமத் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் விழுப்புரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக உள்ளார். இவரது மகள் சென்னை–யில் உள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகளை பார்ப்ப–தற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகையை எடுத்து சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் கணேசனின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செல்போன் மூலம் கணே–சனுக்கு தெரி வித்தனர். அவர் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தார்.


    புகாரில் வீட்டின் பீரோ வில் 10 பவுன் நகை இருந்தது என தெரிவித்துள் ளார். அதன்பேரில் போலீசார் கணேசனின் வீட்டுக்கு சென்றனர். பீரோவில் இருந்த நகை மற்றும் பொருட்கள் மாயமாகி இருந்தது. கணேசன் வந்தால்தான் கொள்ளை போன பொருட்களின் முழு நிலவரம் தெரியவரும். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளயைர்களை பற்றி துப்புதுலக்க கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×