search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கடை"

    • நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத்தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை- நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இங்கு தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பழைய மரப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அப்போது நள்ளிரவில் திடீரென மரக்கடையில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவி மரப்பொருட்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் மரப்பீரோக்கள், கட்டில்கள், மரப்பொருட்கள் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்டைகள் முழுவதும் எரிந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த மரக்கடைக்கு பின்புறம் உள்ள கடைகளின் மீது தீ பற்றி எரிந்துவிடக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் இந்த குடோன் பகுதிக்குள் நின்று கொண்டு மரக்கடைக்குள் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

    நீண்ட நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணி அப்பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார்.
    • வாழ்வில் வெறுப்படைந்த மணி சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கண்ணாடிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணி(வயது 51). இவரது மனைவி சந்திரா(40). மணி அப்பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது வலது கை உடைந்தது. இதனால் அவரால் தொழிலை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு மஞ்சள்காமாலையால் அவர் மிகவும் பாதிப்படைந்தார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த மணி சம்பவத்தன்று விஷம் குடித்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    • கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடினார்.
    • கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது பொருட்கள் வழங்குவது போல் வந்து நடித்து அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது

    குனியமுத்தூர்:

    கோவை ஆத்துப்பாலத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40). இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வந்தார்.

    அவர் கடையில் உள்ள மர பொருட்களை பார்த்தார். கடையின் மேலாளர் பொருட்களின் விலையை கூறி கொண்டு இருந்தார்.

    மேலாளர் கடையின் வேரு இடத்துக்கு சென்றார். அப்போது கடையில் இருந்த அந்த பெண் யாரும் இல்லாததை பார்த்து திடீரென கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.

    சிறிது நேரம் கழித்து மேலாளர் வந்து பார்த்தபோது பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் கடை உரிமையாளர் ஷாஜகானுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது பொருட்கள் வழங்குவது போல் வந்து நடித்து அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகான் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பறினர்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் பரபரப்பு மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
    • ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் கணபதி மரக்கடை இயங்கி வருகிறது. இந்த மரக்கடையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று தீப்பற்றி எரிவதாக திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வாகனம் சென்றது. மரக்கடை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் பின்பக்கமாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

    சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீயானது அங்குள்ள மரங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. மரம் அறுக்கும் இயந்திரம் மட்டும் எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் காலதாமதமாக சென்றிருந்தால் தீ அருகில் உள்ள மரங்களுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். மரம் அறுக்கும் இயந்திரத்திற்கு வரும் மின் இணைப்பை நிறுத்தாமல் சென்றதால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×