என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் பயிற்சி"

    • 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும்
    • வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்படுகிறது.

    இதில் உறுப்பினராக 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர்.

    இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.

    பயிற்சி பெறவுள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.

    18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம் பயிற்சி பெறுவோருக்கு எல் அண்ட் டி., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும்

    ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமான கழகம் வழங்கும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்.

    இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே தகுதியானவர்கள் அம்மன் நகர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம் வேலூர் 632 010 என்ற முகவரியில் உள்ள வேலூர், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2292212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
    • பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஏர்கண்டிசனர், ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மற்றும் பராமரித்தால் தொடர்பான பயிற்சிகள் 30 நாட்கள் வழங்கபட உள்ளது.

    பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை- மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும்.

    தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழிர்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். பயற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை வங்கிக்கு கொண்டு வர வேண்டும்.

    பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும். திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • உணவுப்பொருட்கள் தயாரிக்க இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது என்று பெட்கிராட் தாளாளர் சுப்புராம் தெரிவித்தார்.
    • 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனம் மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்பு நிறுவன தாளாளர் சுப்புராம் கூறியதாவது:-

    இந்திய தொழில் முனை வோர் மேம்பாட்டு நிறு வனம், அசெஞ்சர் நிறுவனம் மற்றும் சுபம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மதுரை நாராயணபுரத்தில் இலவச தொழிற்பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 19-ந் தேதி வரை 34 நாட்களுக்கு இந்த இலவச தொழில் பயிற்சி நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில் காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், உலர் பழங்கள் தயாரித்தல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பயிற்சிகளாக வழங்கப்படு கின்றன. மேலும் இந்த உணவு பொருள்கள் தயாரிப்பது தொடர்பாக நேரடி செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது.

    இது தவிர சொந்தமாக தொழில் தொடங்க தேவை யான ஆலோசனை கள், வங்கி கடன் உதவி மற்றும் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான முன் ஆலோ சனைகள் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படு கிறது. இந்த இலவச பயிற்சி யில் பங்குபெறும் நபர்க ளுக்கு எப்.எஸ்.ஏ.ஐ சான்றி தழ் மற்றும் எம்.எஸ்.எம்.இ. சான்றிதழ்கள் பெற்று தரப் படுகிறது.

    எனவே விருப்பமுள்ள வர்கள் மதுரை, எஸ்.எஸ்.காலனி,வடக்குவாசல் முகவரியில் உள்ள சுபம் அறக்கட்டளை அலுவல கத்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள லாம்.

    மேலும் 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு சுபம் அறக்கட்டளை மார்ட்டின் லூதர் கிங்கிடம் முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
    • உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில், திறமையான மனிதவளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவை தொழில்துறைக்கு அதிக உற்பத்தி மேலாண்மை மற்றும் மேற்பார்வை திறனை வழங்குகிறது. தொழில் துறையினருக்கு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து திருப்பூர் மண்டலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சியை வழங்கி வருகிறது. சிறப்பு தையல் எந்திர ஆபரேட்டர், மெர்ச்சண்டைசிங் பயிற்சி வகுப்புகள் திருப்பூரில் ஆயிரம் பேருக்கு வழங்க உள்ளனர். இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்கவிழா வருகிற 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கலையரங்கத்தில் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் முதல் குழுவில் படிக்க தேர்வான பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

    • இலவச தொழில் பயிற்சியில் சேர வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சுய வேலைவாய்ப்புபயிற்சி நிறுவனம் சார்பில் நடத்த–ப்படும் கீழ்கண்ட இலவச தொழிற் பயிற்சி பெற ஆர்வமுள்ள வேலை–வா–ய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது: எலக்ட்ரிக்கல், மோ–ட்டார் ரீவைண்டிங்,சிசிடிவி இன்ஸ்டாலேசன் மற்றும் சர்வீஸிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செயல்மு–றை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் 25.07.2022 அன்று தொடங்க–ப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்தால் போதும்,

    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, ஆதார் மற்றும் ரேசன் கார்டு, மாற்றுச் சான்றிதழ், 100 நாள் வேலை அட்டை ஆகிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    முன்பதிவு தொடர்புக்கு : 9944850442, 9626497684, 7539960190, 7804202360, 9626644433, இயக்குநர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின்ரோடு, கீழுப்பழுவூர், அரியலூர் என முகவரியை தொடர்பு–கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப–ட்டுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது பற்றியும் பேசினார்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.

    மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×