என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய வீடு"
- 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார்.
- பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியில் வசித்து வருபவர் மருதம்மாள் (வயது 75). கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும், தனது 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில் மிகவும் சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வருவதை கண்ட சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, மருதம்மாள் மூதாட்டிக்கு வீட்டை கட்டித்தர முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன் மூலம் உண்மை நிலையை கண்டறிந்து, உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் ராணுவதுறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ரெயில்வேத்துறை, மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்தனர்.
இந்த வீட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரையை சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை இணை ஆணையர் தேவநாதன், அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வர் ஐசக், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் விசுவாசம், மாறவர்மன், சி.ஐ.எஸ்.எப். போலீஸ் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்கள் குமார், சரவணன், தினேஷ், சகாய பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மூதாட்டி மருதம்மாளுக்கு உணவு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் பால்தாமஸ் நன்றி தெரிவித்தார்.
- டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார்.
- கோலி ஓய்வுக்கு பின்னர் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இப்போது தான் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2007-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல 2013-க்கு பிறகு இந்திய அணி ஐசிசி டிராபியை வெல்வதும் இதுவே முதல்முறை.
இறுதி போட்டியில் விராட் கோலி எடுத்த 76 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டி தொடருடன் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விராட் கோலி முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார்.
இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
இந்நிலையில் மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டி வந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
புதிய வீடு குறித்து விராட் கோலி கூறியதாவது:-
எனது அலிபாக் வீட்டைக் கட்டுவதற்கான பயணம் ஒரு தடையற்ற அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் ஒன்றிணைவதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிய அவாஸ் குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி. இங்கு என் அன்புக்குரியவர்களுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க காத்திருக்க முடியாது.
இவ்வாறு கோலி கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீட்டின் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் நயன்தாரா இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது.
தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புதிய வீட்டில் நயன்தாரா குடியேறி இருக்கிறார். வீட்டின் முன்னால் எடுத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.
புதிய வீட்டுக்கு சென்ற நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
- வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
- சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது.
- இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.
அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடலூர் அருகே புதிய வீடு கட்டிய கூலி தொழிலாளி திடீரென இறந்தார்.
- இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு என்.மூலக்குப்பம் சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 38). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது ஊரில் புதிய வீடு சிவ முருகன் கட்டி வந்தார். இந்த நிலையில் இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார். இன்று அதிகாலை திடீரென்று சிவமுருகனுக்கு கை கால் மறுத்து திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிவமுருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிவ முருகனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்