என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"

    • கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. உளவுத்துறை போலீசாரின் ஆசியோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.எனவே திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் லாட்டரி வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார்.
    • ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை.

    சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் 1975-ம் ஆண்டு டெல்லி வந்திருந்தார். அப்போது டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மகாநந்தியா என்பவரை சந்தித்தார். ஏழை மாணவரான அவர் பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன் படைத்தவர்.

    அவரது கையால் தனது உருவ படத்தை வரைந்து தருமாறு ஷெட்வின் கேட்டார். அதன்படி அவரும் வரைந்து கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்த நிலையில், ஷெட்வின் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் ஷெட்வின் சொந்த நாடு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதால் அவர் தனது கணவரை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது மகாநந்தியா தனது படிப்பை முடிக்க வேண்டி இருந்ததால், நான் ஸ்வீடன் வந்து உன்னை சந்திக்கிறேன் என கூறினார்.

    பின்னர் ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார். ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை. இதனால் தன்னிடம் இருந்த அனைத்து பொருளையும் விற்று ஒரு சைக்கிள் வாங்கினார். பின்னர் சைக்கிளிலேயே ஐரோப்பாவுக்கு 1977-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

    தினமும் 70 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக 4 மாதங்கள் பயணம் செய்து மே 28-ந் தேதி ஐரோப்பாவை அடைந்துள்ளார். பின்னர் ரெயிலில் கோதன்பர்க் சென்று தனது காதல் மனைவி ஷெட்வினை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது 2 குழந்தைகளுடன் வசிக்கும் இந்த ஜோடியினர் இப்போதும் 1975-ல் இருந்ததை போலவே ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறுகிறார்கள். இவர்களது காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள்.
    • சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள்.

    சிலர் வித்தியாசமாக செய்யும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும்.

    அந்த வகையில் 2 பெண்கள் தரையில் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்வது போன்ற ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள். அதன் பிறகு சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள். பின்னர் அந்த வட்டத்தில் அவர்கள் நடைபயிற்சி செல்வது போல காட்சிகள் உள்ளது.

    வைரலாக பரவும் இந்த வீடியோவை 1.14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

    • 7 வினாடி மட்டும் கொண்ட வீடியோவில், இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு அழகான சிறுமி மானை பார்த்தவுடன் அதன் அருகே செல்கிறார்.
    • வீடியோ இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

    விலங்குகளை பார்த்தால் பயப்படும் சிறுவர்-சிறுமிகள் சிலர் உள்ளனர். சில சிறுவர்கள் விலங்குகளிடம் குறும்பு செய்வார்கள். சிலர் விலங்குகளுடன் நட்பாக பழகுவார்கள்.

    அந்தவகையில், ஒரு சிறுமி மானுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 7 வினாடி மட்டும் கொண்ட இந்த வீடியோவில், இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு அழகான சிறுமி மானை பார்த்தவுடன் அதன் அருகே செல்கிறார்.

    பின்னர் தனது கையில் இருந்து உணவை கொடுக்கிறார். மான் அதை சாப்பிடுகிறது. பிறகு, அந்த சிறுமி, மானுக்கு தலைகுனிந்து வணங்குவதை காண முடிகிறது. இதைப்பார்த்த மானும் அந்த சிறுமியை நோக்கி தலையை ஆட்டி நன்றி தெரிவிப்பது போல் காட்சி உள்ளது. இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

    • தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில் பாரம்பரிய ஆடை அணிந்துள்ளனர்.
    • பாடலுக்கு மூத்த மகன் நடனமாட, அவனை போலவே தந்தையும் அசத்தலாக நடனமாடுகிறார்.

    தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து தந்தையும் அவர்களைபோலவே நடனமாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ குடும்ப விழாவின்போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    அதில், தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில் பாரம்பரிய ஆடை அணிந்துள்ளனர். பின்னர் ஒளிபரப்பப்படும் பாடலுக்கு மூத்த மகன் நடனமாட, அவனை போலவே தந்தையும் அசத்தலாக நடனமாடுகிறார். அப்போது இளைய மகனும் அவருடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க செய்கிறது. இந்த வீடியோவை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

    • அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி.
    • பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

    • பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார்.
    • கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார்.

    பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்டனர். பின்னர் போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட இருந்தது.

    அப்போது போட்டியில் 2-ம் இடம் பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறினார். அவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார். இதனால் அந்த கிரீடம் துண்டுதுண்டாக உடைந்தது. இதைப்பார்த்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர்.

    அப்போது நதாலியின் கணவர் கூறுகையில், நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் ஆத்திரத்தில் இவ்வாறு செய்தேன் என்றார். ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    • மூதாட்டி தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் வயதான மூதாட்டி ஒருவர் அசத்தலாக நடனமாடுகிறார். அவர் தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது.

    இவ்வளவு வயதில் பலரால் சரியாக நடக்கக்கூட முடியாது. ஆனால் இந்த பாட்டி 'மோனிகா ஓ மை டார்லிங்' பாடலுக்கு அசத்தல் நடனமாடுவதை அவருடன் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

    இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பாட்டியின் நடனத்தை பாராட்டி வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

    • திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
    • பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து சனோஜ்குமார் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்தவர் சனோஜ்குமார் சிங். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று புதுமண தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    ஆனால் திருமணத்திற்கு முன்பே பிரியங்கா குமாரி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இருவரும் வீட்டை விட்டு ஓடுவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இந்த விபரம் சனோஜ்குமாருக்கு தெரிய வந்தது.

    அவர், பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனது மனைவியை அவரது விருப்பப்படி காதலருடன் அனுப்பி வைத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    • அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.

    சென்னை:

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வலைதளத்தில் நடக்கும் மோதல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் 'அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

    அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

    தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கும் பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவற்ற தலைவர்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும்.

    அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது.

    பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    • 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • தரமற்ற சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.

    இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை தார்பாய் போன்று அப்பகுதி மக்கள் வெறும் கைகளால் தூக்குவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.




    • உலக சாதனைக்காக நடத்தப்பட்ட விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
    • திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பராம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா கடந்த 26-ந்தேதி நடந்தது.

    உலக சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு மணப்பெண் தனது கணவர் பையில் மறைத்து வைத்திருந்த குட்காவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். யாரும் பார்க்கவில்லை என அந்த மணப்பெண் நினைத்துள்ளார்.

    ஆனால் விழாவை பதிவு செய்த கேமிராவில் இந்த காட்சி பதிவானது. மணக்கோலத்தில் புதுப்பெண் குட்கா போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×