என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருடன் கைது"
- திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
- சாப்பாடு தாருங்கள் என அலறினார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.
அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.
அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.
ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.
திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 கார் பறிமுதல்
- போலீசார் விசாரனை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது திருடப்பட்ட கார் என்பதுதெரியவந்தது.
விசாரணையில் அவர் முனியந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பதும்,திருடப்பட்ட கார் வெள்ளூர் குஜால்பேட்டையில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளர் மணிவண்ணனுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து மற்றொரு காரையும்
திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- அரசுப்பள்ளி அருகே ஆசாமி ஒருவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
- அவன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவு படி, டி.எஸ்.பி. அணி போலீசார் நேற்று இரவு பண்ருட்டி,அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த ஆசாமி ஒரு வனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அவன் அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரிய வந்தது.
அவனிடம்மேலும் விசாரணை நடத்தியதில் அவன் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திர வீரன் (வயது 30) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவனை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.
- மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டின் பூட்டை கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து வீட்டினுள் இருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான சதீஷ்குமார் (25) என்பது தெரிந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் கோவாவிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் 17.5 பவுன் தங்க நகைகளும், பழையபேட்டை செல்வராஜ் நகரில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகைகளும், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 பவுன் தங்க நகைகளும் என 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி(எ)விக்ரம், அப்பு(எ)விமல் ஆகியோரிடம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சதீஷ்குமார் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை சம்பவங்கள் தனித்தே ஈடுபடுவது வழக்கம் கொண்ட சதீஷ், அந்த நகைகளை விற்க வைப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செலவு செய்வது, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டவர் என தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.
- சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
- கைது செய்து அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக நகர காவல் துறையினருக்கு புகார்கள் வந்தது. அதனையடுத்து காவல்துறையினரும் புகாரின் பெயரில் குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் வாகனங்களையும் மீட்டு வந்தனர். மேலும் பலரின் புகார்களுக்கு சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட காரிமங்கலம் அருகே கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருட்டில் ஈடுபட்ட வேலுமணியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஏற்கனவே 2021-ல் இருசக்கர வாகனம் திருடிய 6 வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 15 பவுன் தங்க நகை பறிமுதல்
- திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹபிப் ரஹ்மான் மகன் அப்துல் பாஷா (33). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து தொடர் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே பாச்சல் மேம்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறித்து சென்றது மற்றும் ஜோலார்பேட்டை, பெரி யகரம், கண்ணாலபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில் தொடர்பு டைய குற்றவாளியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் சந்தேகமான முறையில் சுற்றித்திரிந்த அப்துல் பாஷாவை டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அவரை திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15, பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
பின்னர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் அப்துல் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்,
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பல திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
- வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.
- காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் புதூர் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 52) விவசாயி. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் இவரது வீட்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து திருட முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவர் வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. பயத்தில் கதறியபடி நடுங்கிப் போன அந்த வாலிபர், ஆடாமல் அசையாமல் அங்கேயே அமர்ந்து விட்டார்.
அவரை நகர விடாமல் நாயும் அதே இடத்தில் அமர்ந்து அவரை கண்காணித்தபடி இருந்தது. இப்படியே, 2 மணி நேரம் ஆடாமல் அசையாமல் வாலிபர் உட்கார்ந்திருக்க, நாயும் அவரை பார்த்தபடியே இருந்தது. காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து இது குறித்து தகவல் அளித்தார். அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு வந்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர். திருடும் நோக்கில் வீட்டில் குதித்த அவரை நாயிடம் சிக்கி கடிபட்டதால் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.
திரைப்படத்தில் வருவது போல் சிப்பிபாறை ரக நாய் திருட வந்த நபரை 2 மணி நேரம் லாக் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
- மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தேனி:
தேனி சிவராம்நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 56).
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீரபாண்டியில் உள்ள திருமண மண்டபம் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அந்த பைக்கை ஒரு வாலிபர் திருடிச் செல்ல முடியன்றார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் பவர் ஹவுஸ் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் (22) என தெரிய வரவே அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்