search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.ஐ.டி.யு."

    • பீடித்தொழி லாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும்.
    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமையில் கிளை அமைப்பு கூட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடை பெற்றது. பீடித்தொழி லாளர்க ளுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ், விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை பீடி சுற்றியதற்கான சம்பளம் வழங்க தனியார் பீடி கம்பெனி நிர்வாகத்தை வலிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதம்புத்தூர் கிளை தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் சந்திரா, சரஸ்வதி, செயலாளர் தனலெட்சுமி, துணை செயலாளர்கள் கவிதா, நாராயண லெட்சுமி, பொருளாளர் கிருஷ்ண நவமணி, சம்மேளனக்குழு உறுப்பினர் வள்ளிமயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார்.
    • தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது.

    நெல்லை:

    நெல்லை அரசு போக்குவரத்துக கழகத்தின் சி.ஐ.டி.யு. ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினார்.

    அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் விரைவு போக்குவரத்து கழக மாநில துணை பொதுச்செயலாளர் சுதர்சிங், மத்திய சங்க உதவி செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் பொன்ராஜ், வெங்கடாசலம், பெருமாள், மோகன், சரவணகுமார் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். டி.என்.எஸ்.டி.சி. பொதுச்செயலாளர் ஜோதி நிறைவுரையாற்றினார்.

    • கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
    • 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.

    • திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.

    திருப்பூர் :

    உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

    சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

    இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்,

    கரூர்:

    சி.ஐ.டி.யு.வின் 9-வது மாவட்ட மாநாடு கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர் தண்டபாணி வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும், கரூரின் ஜவுளித்தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட உதவிச்செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    • சி.ஐ.டி.யு. 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் (சி.ஐ.டி.யு.) 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கராஜ் தொடக்கி வைத்தார்.

    முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.துணைத்தலைவர் சுதாசுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பு வேலையறிக்கையையும், பொருளாளர் அருண் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதில் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, வாகன அழிப்புக் கொள்கை, சேவைக் கட்டணம் தண்டனைத்தொகை மற்றும் போக்குவரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், இ.எம்.ஐ. என்ற மாதாந்திர தவணை நெருக்கடி, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தல்
    • சத்தியாக்கிரக போராட்டத்தில் பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் சி.ஐ.டி.யு.க்கு ஒதுக்கப்பட்டிருந்த 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தி குளச்சல் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது.

    பணிமனை சி.ஐ.டி.யு.செயலாளர் ஜாண் பென்னி தலைமை வகித்தார். தலைவர் ரெத்தினராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமோகன் துவைக்கவுரை ஆற்றினார். பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். மற்றும் நிர்வாகிகள் நடராஜன், லெனின் ஜெயா, ஜாண்சன், ராஜேந்திரன் உள்பட 12 பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×