search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வதிபுரம்"

    • மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

    நாகர்கோவில்:

    பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று மதியம் கார் ஒன்று வந்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் வந்த போது டிரைவர் காரை மெதுவாக ஓட்டி சென்றார். இதையடுத்து பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.

    அதனால் பின்னால் வந்த காரும் நின்றது.ஆனால் அதன் பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக முன்னால் நின்ற கார் மீது மோதியது.மோதிய வேகத்தில் அந்த கார் பஸ்மீது மோதி நின்றது. இதில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.

    • வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண் செல்வன் (வயது 58).

    இவர் பார்வதிபுரத்தி லிருந்து அழகம்பாறை செல்லும் சாலையில் பல சரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் ஜாண் செல்வன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின் பக்க சுவரில் துளை போடப் பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் பல சரக்கு பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக ஜாண் செல்வன் தெரிவித்தார். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் இருந்து குத்து விளக்கை மர்மநபர்கள் திருடி இருந்தது தெரிய வந்தது. அந்த குத்து விளக்கு அந்தப் பகுதியில் கிடந்ததை போலீசார் கைப்பற்றினார்கள்.

    மேலும் வெல்டிங் கடையில் இருந்து ட்ரில்லிங் மெஷின் ஒன்றை எடுத்து வந்து பல சரக்கு கடையில் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
    • இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை யாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    • கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
    • டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக்.இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை ஊழியர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.8 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சசிதரன், சுப்பையா ஆகிய இருவர் பலியானார்கள். 

    மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவிளையை சேர்ந்த பிரவீன் (வயது 25) என்பவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் நேற்று சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    • பேயன்குழி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகளையும் பார்வையிட்டார்
    • மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளார்.

    இன்று 3-வது நாளாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்து பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு மேற்கொண்டார். பார்வதி புரத்தில் கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து மஸ்கட்டில் மீன்பிடிக்க சென்ற படகில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தி னர், பகவத் கிஷன் ராவ் கராத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், ராஜாக்க மங்கலத்தைச் சேர்ந்த 2 பேர் பெரிய காட்டை சேர்ந்த 5 பேர் என 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.அங்கு சென்ற அவர்களை மீன் பிடிக்க விடாமல் சம்பளமும் கொடுக்காமல் படகிலேயே சிறை பிடித்து வைத்துள்ளனர்.

    மேலும் மீனவர்களின் விசாக்களும் புதுப்பிக்காமல் உள்ளதால் அவர்கள் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.எனவே மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து பேயன்குழி பகுதியில் நடந்து வரும் 4 வழி சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்து ராமன்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதிராஜன் மற்றும் கிருஷ்ணகுமார்,கிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

    ×