என் மலர்
நீங்கள் தேடியது "பௌர்ணமி"
- நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன்.
- இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று நெட்டிசன்கள் பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று விளக்கம் அளித்தார்.
- திரளான பெண் பக்தர்கள் கையில் மாங்கனி தட்டு ஏந்தி காரைக்கால் அம்மையாருக்கு வழிபாடு
- சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சி
கன்னியாகுமரி :
சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார் களில் ஒருவராக போற்றப் படும் காரைக்கால் அம்மை யாருக்கு காரைக்காலில் தனி சன்னதி உண்டு.
அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ் வரர் கோவிலிலும் காரைக் கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் மாங்கனி அளித்ததை நினை வூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
அதேபோல இந்த கோவி லில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பௌர்ணமியான நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடந்தது.இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடந்தது. இதையொட்டி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின்னர் காரைக் கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
அப்போது திரளான பெண் பக்தர்கள் தாம்பாள தட்டுகளில் மாம்பழங்களை ஏந்தியபடி காரைக்கால் அம்மையார் எழுந்தருளி இருந்த வாகனத்தின் முன்னால் இருபுறமும் ஊர்வலமாக அணி வகுத்து சென்றனர். அதன்பிறகு பெண் பக்தர்கள் தாங்கள் தாம்பாள தட்டுகளில் குவித்து வைத்திருந்த மாம்ப ழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபட்டனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.