search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் பணி"

    • கலெக்டர் தகவல்
    • 47 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இரவு காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு விண்ணப்பி க்கலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) இரண்டாம் சிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

    ஜூலை மாதம் 1-ந் தேதி வரை 47 வயதுக்கு மேற்படாத தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நேற்று 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்ததில் 344 பேர் கலந்து கொண்டனர்.
    • 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்ட தேர்வு நடந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பு படை வீரர் மற்றும் வன காவலர் பணியிடங்களுக்கான உடற் தகுதி தேர்வு துவங்கியது. நேற்று 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்ததில் 344 பேர் கலந்து கொண்டனர். அதில் 295 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படை வீரர் மற்றும் வன காவலர் பணியிடங்களுக்கு உடற்பகுதி தேர்வு நடக்கிறது.

    இத்தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1138 ஆண் தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதில் 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்ட தேர்வு நடந்தது. 400 பேர் இதில் பங்கேற்றனர்.

    இதில் 295 பேர் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளவிடுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.

    இந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வினை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை, ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

    • சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை
    • 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மத்திய சிறையில் காலி யாக உள்ள ஒரு முடிதிருந்துநர், வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்க களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய் யப்பட உள்ளனர்.

    இதற்கான செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வேலூர் மத்திய சிறையில் நடைபெற உள்ளது.

    முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப்ப டிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் பெற முடியும்.

    எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவி னருக்கு 18 முதல் 37 வயது வரையும், பிசி., எம்.பி.சி., பிசி (எம்) பிரிவின ருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவி னருக்கு 32 வயது வரையும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் கல்வி, ஜாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை யும் இணைத்து விண்ண ப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20- ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • காவலர் பணி சந்தேகங்களுக்கு எஸ்பி அலுவலக உதவி மையத்தில் விளக்கம் பெறலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல் முறை கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கிவரும் உதவி மையத்தை நேரில் அணுகி அல்லது 7305984100 என்ற செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இந்த உதவி மையம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ×