search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுச்செயலாளர்"

    • சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.

    இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

    இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.

    சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.

    அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.

    இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் முன்னாள் பகுதி செயலாளரும் அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி முன்னிலையில் அ.தி.மு.க. வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுப்பட்டி முத்துமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, மாணவரணி துணை செயலாளர் ராஜாராமன், நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகேந்திரன், வட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிரந்தரபொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியில் கூறியுள்ளார்.
    • 5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும் என்றும் பேசினார்.

    மதுரை

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் வெற்றி சரித்திரத்தில் மகுடமாக மற்றும் ஒரு வெற்றியை நீதி அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொருத்த மட்டில் மக்கள் பணியே மகேசன் பணி என்று எம்.ஜி.ஆர். சொன்னது போல மக்களுக்காகவே இந்த இயக்கம் அர்ப்ப ணிக்கப்பட்டது என்று அம்மா சொல்வார்கள். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அனுபவத்தாலும், அம்மாவி டம் கற்ற பாடத்தினாலும் அ.தி.மு.க.வை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தற்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் 5 மாவட்ட மக்களுடைய நீராதார பிரச்சினையாக இருக்கும் முல்லை பெரியாறு பிரச்சினைக்காக கேரளா செல்வதாக செய்தித்தாள்களில் படித்தேன்.

    முதலமைச்சரின் பயணம் விளம்பரமாக இல்லாமல் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும்.

    அம்மா வழியில் ஆட்சி நடந்த போது உயர்த்தப்பட்ட முல்லை பெரியாரின் நீர்மட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட முடியாத அவல நிலை உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்துக்கு தந்தார். ஏனென்றால் மறைந்த முதலமைச்சர் அம்மாவின் மாணவர் அவர். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர். தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர்.

    எனவே நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.கட்சி பிரச்சினையில் தி.மு.க.வும் மூக்கை நுழைக்கிறது.

    அதன் அரசியல் நாளிதழில் எடப்பாடி பழனிசாமி பற்றி அவர்கள் விமர்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆரை விமர்சித்தது தான் அந்த நாளிதழ். எங்களுக்கு அது பெரிது அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி உள்ள ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.
    • 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது.

    முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி.பழனிசாமி நிரந்தர பொது செயலா ளராக பொறுப்பேற்க வேண்டும், அனைத்து வழக்கு களும் நீங்கி இரட்டை இலை மற்றும் கட்சி அலுவலகம் அனைத்தும் பெற்று அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது.

    முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 108 வேதிகை, மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடைபெற்று,பூர்ணா ஹூதி, மகா தீபாரதனை கட்டப்பட்டது. யாகத்திற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.

    ×