என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணம் பறித்த வாலிபர் கைது"
- அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதிைய சேர்ந்தவர் சிவசங்கர் (வயது70). இவர் நேற்று பேரிகை சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர். உடனே அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி ெகாடுத்தனர்.
அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். பிடித்த நபரை சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முஸ்லிம் தெருவை சேர்ந்த முகபுபாஷா (வயது37) என்பது தெரியவந்தது. உடன் வந்த நபர் முனீர் (22) தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து வாட்ச், பணம் ஆகியவை பறிமுதல் செய்து போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
- கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மது குடிக்க பணம் கேட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை வாலிபர் பறித்துச்சென்றார்..
- புகாரின் பேரில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகில் உள்ள தும்மணக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 25). இவர் நேற்று தனது வீட்டு அருகே நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணபாண்டியன் (27) என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.
அவர் பணம் தர மறுக்கவே விவேகானந்தன் பாக்கெட்டில் இருந்த ரூ.900 பணத்தை பறித்துக் கொண்டார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பணத்தை திருடிய அந்த வாலிபர் தான் வந்த பைக்கை அதே இடத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டார்.
இது குறித்து வடதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டி யனை கைது செய்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.
- இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
ஒரிசா மாநிலம் கௌவூர் பத்ரக் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தாஸ் (வயது 30). இவர் தற்போது பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை அஜித்குமார் தாஸ் பெருந்துறை செல்வதற்காக பணிக்கம்பாளையம் ரவுண்டனா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கத்தியை காட்டி, நான் யார் தெரியுமா எனது பெயர் சுரேஷ், இந்த ஊரிலேயே பெரிய ரவுடி நான்தான், ஒழுங்கா உன்கிட்ட இருக்கிற பணத்தை எடு என மிரட்டி உள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு உடனடியாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். உடனே அஜித்குமார்தாஸ் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்