என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழிகாட்டுதல் நிகழ்ச்சி"
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தொழிற்படிப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் மணிகண்டன் பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தொழிற்படிப்புகளில் எவ்வாறு வெற்றி பெறுவது? வெற்றிக்கான இலக்கை நோக்கி எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் தொழிற்படிப்புகள் வாயிலாக வாழ்வில் பொருளாதாரத்தின் மேம்பாடுகள் பற்றிக் கூறினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதலாமாண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் துறை ராஜீவ்காந்தி செய்திருந்தார். வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.
படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசும்போது, மாணவர்கள் மத்தியில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முடியாது என்று சொல்லும் மாணவர்கள் ஜெயிக்க முடியாது.
முடியும் என்று சொல்லும் மாணவர்கள் சாதிக்கலாம். உயர்ந்த பதவியை அடைய கடின உழைப்பு கொடுக்க வேண்டும்.
கடின உழைப்பு என்றால் படிப்பில் முழு கவனம் செலுத்துதல், கடின உழைப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார்.
பள்ளி படிப்புக்கு பிறகு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஓய்வு பெற்ற விவசாய ஆசிரியர் மதியழகன், கவுன்சிலர் பரமசிவம், பிரஸ் நந்தகோபால் சதாசிவம், வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் நடந்தது.
- இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையம் சார்பில் அனைத்து இளங்கலை, இளநிலை மற்றும் முதுகலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் திறன் வெளிப்பாட்டின் அவசியத்தை மாணவர்க ளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரை யாளராக சிவகாசி அப்தான் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசுகையில், நிகழ்காலச் சூழலில் அரசு வேலைகளைப் பெறும் முறைகள் குறித்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.
கல்லூரி பணி அமர்வு மைய பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். குமாரபாலாஜி நன்றி கூறினார். இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி
அரியலூர்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிக்டெக்னிக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் வேளாண்மை துறை தலைவர் அப்புதீன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ் பங்கேற்று, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் செயல்பாடுகள் குறித்தும் மெய் நிகர் கற்றல் இணையதளம், தமிழ்நாடு தனியார் வேலை இணையம் குறித்து எடுத்துரைத்தார்.
மாவட்ட தொழில் மையத்தின் திட்ட மேலாளர் விக்னேஷ், பெரம்பலூர் விஜய்ஆனந்த், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, சுயதொழில் , வங்கிக் கடன் குறித்தும், அதே போல் மத்திய மாநில அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ளது , திறன் பயிற்சியின் அவசியம் மற்றும் தனியார் துறை பணியமர்த்தம் குறித்தும் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகல் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- தமிழ்த்துறைத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில்"சிகரம் தொடலாம்" என்ற தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், 48 மாணவர்களைக் கொண்டு உருவான கல்லூரி இன்று 3 ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் வாழ்வில் 3 ஆண்டுகளை தியாகம் செய்தால் 33 ஆண்டுகள் சிறப்பாக அமையும் என்றார்.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சவுந்தர மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா அறிமுக உரையாற்றினார். துணை முதல்வர்கள் பாலமுருகன்,முத்துலட்சுமி ஆகியோரும் பேசினர்.
வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்