என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிற்சங்கங்கள்"
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்தது
- எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி :
மத்திய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இது குறித்து பரப்புரை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. தொழிற் சங்க துணைச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குலாம் மைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தொழிற்சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.
- தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கலெக்டரிடம் மனு
நாகர்கோவில், ஜூலை.10-
குளச்சல் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வை யாளராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நடேசன் தலைமை யில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குளச்சல் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வை யாளர் கோபாலகிருஷ்ணன் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டப்பட்டு விரல் துண்டிக்கப்பட்டது. தலையி லும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. எனவே கோபாலகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட தலைவர் மரிய செல்வன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், குளச்சல் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபால கிருஷ்ணனை தாக்கிய மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
- ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மதுரை
மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று டி.ஆர்.இ.யூ.-சி.ஐ.டி.யூ. ரெயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணைப்பொதுச் செயலாளர் கார்த்தி சங்கிலி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவக்குமார், லெனின், கண்ணன், சங்கர நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். துணைத்தலைவர் வினோத்பாபு நன்றி கூறினார்.
ரெயில்வேயில் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒட்டன்சத்திரத்தில் கேட் கீப்பரை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்