என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பரிசல்"
- தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
- காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையானபிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.
- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.
- ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.
மேட்டூர்:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஷ்வரன்மலை கோவிலுக்கும் மற்றும் மேட்டூர் கொளத்தூர் ஆகிய பகுதிக்கும் சென்று வர காவிரி ஆற்றை கடந்து மேட்டூர் அடுத்த கொளத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.
மேலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொளத்தூரில் இருந்து அரசு பஸ் மூலம் சென்று காவிரி ஆற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
- பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரிசல் மூலம் தேடுதல்
உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
- பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர்.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகில் உள்ள, தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது.
இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்-கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை-பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.
இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாய் எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புதிய டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால், கட்டுபடியாகாது என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.
தொழில் போட்டி காரணமாக அதிக விலைக்கு ஏலம் எடுத்து விட்டு, அதற்கான தொகையை பொதுமக்களிடம் வசூலிக்க ஒப்பந்ததாரர்கள் முயற்சிப்பதும், அதற்கு ஏரியூர் அதிகாரிகள் துணை போவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏரியூர் அதிகாரிகள் பொது மக்களின் நலனில் அக்கறை கட்டாமல், பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் கடந்த 2-ம் தேதி ஏரியூர் போலீஸ் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோரிடம் மனு அளித்தனர்.
மேலும் 40-க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது உடனடி கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று காலை திடீரென கரையோரத்தில் பரிசலை இழுத்துக்கட்டி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உரிய பேச்சு வார்த்தை நடத்தி எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
- கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பரிசல் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக தெங்குமரஹடா, கல்லாம்பாளையம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கிராம மக்களும் பரிசலில் சென்று வருகின்றனர். இன்று காலை கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் கல்லாம்பாளையத்தை சேர்ந்த 3 பேர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கோத்தகிரி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பரிசலில் ஏறி மாயாற்றில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கில் பரிசல் சிக்கி கொண்டது. சிக்கிய வேகத்தில் சிறிது தூரம் பரிசல் அடித்து செல்லப்பட்டது.
இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பரிசலில் இயக்கி கரைக்கு கொண்டு வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பரிசல் ஓட்டுனர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்