என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போட்டி"
- 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாகையில் நடந்தது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியல் கல்லூரி கூட்டரங்கில் நடைப்பெற்றது.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலமையில் நடைப்பெற்ற விழாவில் கூட்டுறவு வார உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல், கீழையூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2870 பயணாளி களுக்கு 12 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- போட்டியில் மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
- மாணவன் அருண், மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் முன்னாள் சபாநாயகர்கள் ஆவுடையப்பன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார். இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் சக்தி 2-வது இடமும், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது சிராஜ் 3-வது இடமும் பிடித்தனர்.
மேலும் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் அருண், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி பிளஸ்-2 மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாருமான ஆவுடையப்பன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியல் பழனிநாடார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் வரதராஜன். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பாஸ்கர், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 6-ம் வகுப்பு மாணவி சித்ரா சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித்திறமை திருவிழா எம்.கே.வி.கே. பள்ளியில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி 2-ம் வகுப்பு மாணவன் பாலசேஷன் மாறுவேடப் போட்டியிலும், 6-ம் வகுப்பு மாணவி சித்ரா 12 வயதுக்கு உட்பட்டோருக்கான சிலம்ப போட்டியில் முதலிடமும், மாணவி மிருதுளா ஜனனி ஓவியப் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் கோதண்ட ராமன் பேச்சு மற்றும் சிலம்பம் போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை
- 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
கடலூர்:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா கடலுாரில் நடைபெற்றது . இப்போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின், சில நிமிடங்கள் சிலம்பம் சுற்றினார்.நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ், மாவ ட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் தட்சணா மூர்த்தி குத்துவிள க்கேற்றினர்.
செயின்ட் ஜோசப் கல்லுாரி செயலர் சுவாமிநாதன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க கவுரவத் தலைவர் வித்யாபதி வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர், கார் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், தமிழ்நாடு, அரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் உட்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம், பயிற்சியாளர் எழிலரசன் செய்திருந்தனர்.
- 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
- 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.
திருப்பூர்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரியில் 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் 134 புள்ளிகளைப் பெற்று 5- வது இடத்தைப் பிடித்தது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.
பத்தகம் பெற்ற வீரா், வீராங்கனைகளை மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவருமான பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
- மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது
- பொள்ளாச்சி எஸ்டிசி வெற்றி பெற்றது.
கரூர்:
ரோட்ராக்ட் கிளப் ஆப் கரூர் மற்றும் கரூர் மாவட்ட கைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடத்து. கரூர் மாவட்ட கைப்பந்து சங்க பேட்ரன் சி.பாஸ்கர், அட்லஸ் எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் எம்.நாச்சிமுத்து, கரூர் மாநகராட்சி துணை மேயர்தாரணி ப.சரவணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். சென்னை லயோலா, மதுரை அமெரிக்கன், சென்னை செயின்ட் ஜோசப், பொள்ளாச்சி எடிசி, திருச்சி ஜமால், திருச்சி செயின்ட் ஜோசப், பெருந்துறை கலைக்கல்லூரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் எஸ்டிசி பொள்ளாச்சி, மதுரை அமெரிக்கன், திருச்சி செயின்ட் ஜோசப், குமாரசாமி கிளப். பி பிரிவில் சென்னை லயோலா, சென்னை செயின்ட் ஜோசப், பெருந்துறை, ஈரோடு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை, பொள்ளாச்சி எஸ்டிசி 25க்கு 14, 25க்கு 23 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றது. 2வது போட்டியில் கரூர் குமாரசாமி கிளப், மதுரை அமெரிக்கன் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்