என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அணையில்"
- விவசாயிகள் மகிழ்ச்சி
- அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.
இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
- தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
- விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை முதலே பொதுமக்கள் பலர் வந்து சென்றனர். இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழ மை) விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் இளைஞர்கள் உள்பட பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.
இதை தொடர்ந்து பொது மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- ஷட்டரை தூக்கும் இரும்பு கயிறு 2 இடங்களில் அறுந்துள்ளது.
- பராமரிப்பு பணிகளும் தொடங்கியது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகளில் 2 இடங்களில் ஷட்டர் இரும்பு கயிறுகள் அறுந்து விழுந்ததையடுத்து அதனை சரி செய்யும் பணி, நேற்று முதல் தொடங்கியது .
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மொத்தள்ள 7 மதகுகளில் 1 - வது மதகு மற்றும் 5-வது மதகுகளில் ஷட்டரை தூக்கும் இரும்பு கயிறு 2 இடங்களில் அறுந்துள்ளது.
அறுந்து விழுந்துள்ள இந்த இரும்பு கயிறுகளை மாற்றுவதற்காக, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையொட்டி, அணையில் 40 அடி அளவில் இருந்த தண்ணீர், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு 24 அடியாக குறைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நேற்று பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணிகளை தொடங்கினர். மதகுகளில் அறுந்து விழுந்த 2 ஷட்டர் இரும்பு கயிறுகளையும் மாற்றும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும், வருகிற 23 -ந் தேதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்