என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேம்பாடு"
- மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 3 பஸ் நிலையங்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது.
விழாவிற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பஸ் நிலையங்கள் புணரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
குமரி மாவட்டம் தலை நகராக நாகர்கோவில் விளங்கி வருகிறது. இந்த மாநகராட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரூ.8 கோடி மதிப்பில் இங்குள்ள 3 பஸ் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகியவை தலா ரூ. 2 கோடி மதிப்பிலும், கிறிஸ்டோபர் பஸ் நிலையம் ரூ. 4 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்தப் பணிகள் முடியும் போது பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தவும் பார்க்கவும் மிக நன்றாக அமையும்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சர்வர் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் விட்டதால் தான் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து நிலைகளும் சரியாகும்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அரசு எடுக்கும் முடிவை காலதாமதம் செய்யும் தவறான முன்னுதாரணம் வருத்தம் அளிக்கிறது. மக்களை பாதிக்கக் கூடிய வகையில் கவர்னர் கிடப்பில் போட்டு இருப்பதின் உள்நோக்கம் குறித்து பா.ஜனதா தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது. அவர்கள் இந்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்த றிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய் ) சுகபுத்ரா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
- குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும். பின்னர் அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.
விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதர வற்ற விதவை பெண்கள் அமைந்துள்ன குழு விற்கு முன்னுரிமை அளிக் கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருந்தல் அவசியம், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்க ளுக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேச்சு
- அனைத்துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு" அளவிலான பல்துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்களின் பங்கேற்புடன் கூடிய "நம்ம ஊரு சூப்பரு" எனும் மாபெரும் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
நேற்று (20-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (2-ந்தேதி) வரை ஊரகப் பூங்காக்கள், பஸ் நிறுத்தங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களும் , நீர்நிலைகளும் சுத்தம் செய்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பள்ளி மற்றும் தொடர்பான செயல்பாடுகள் கல்லூரி களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுய உதவிக்குழு மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திடும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடு கள் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 01.10.2022 வரை சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்கள் திட்டத்திற்காக வீடுகள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள் போன்ற வற்றில் கீரைகள், முருங்கை, நெல்லி, பப்பாளி, இனிப்பு கிழங்கு போன்ற ஊட்டச்சத்து தோட்டங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
2.10.2022 அன்று சிறப்பு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பாதுகாப்பான துப்புரவு மற்றும் திட திரவ கழிவுக்காக வழங்கப்படும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல் .
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், பொது இடங்களில் குப்பை இல்லா மலும், திறந்தவெளியில் மலங்கழித்தலற்ற நிலை யினை உறுதி செய்தல், பயன்பாட்டிலிருக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், இப்பணிகளை மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அனைத் துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசின் அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் உடனே துவங்கும் என்றனர்.
- அத்துடன் சுற்றுலா வளர்ச்சி சிறப்பு திட்டம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
தாராபுரம்:
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மாநில அளவில் 40 இடங்களில் மாவட்ட சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் சுற்றுலா வளர்ச்சி சிறப்பு திட்டம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.சுற்றுலா துறையில் மண்டலம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் அறிக்கை கோரப்பட்டது. இதனால் தாராபுரத்தை மையமாக கொண்டு கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சுற்றுலா தலங்களை இணைக்கும் சாலைகள் 12 கி.மீ., தூரம் மேம்படுத்த ரூ.21.84 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், அரசின் அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் உடனே துவங்கும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்