என் மலர்
நீங்கள் தேடியது "காட்டெருமை பலி"
- வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது.
- மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது.
அரவேணு,
கோத்தகிரி பழைய உழவர் சந்தை வளாகத்திற்கு அருகே தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் பின்புறம் நேற்று அதிகாலை மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறியது. அப்போது அதன் எடை தாங்கமல் தொட்டியின் மேல் மூடி உடைந்து விழுந்தது. இதில் கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்ததுடன், வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி தவித்த காட்டெருமையை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காட்டெருமை சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் ராஜனும் வரவழைக்கப்பட்டார். ஆனால், குறுகிய தொட்டிக்குள் சிக்கி இருந்ததால், மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் காட்டெருமை உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 4 வயதான ஆண் காட்டெருமை என கூறினர்.
- கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.
- பின்னர் காட்டெருமையை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
நத்தம்:
செந்துறை அருகே பழனிபட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் 8 வயதுள்ள காட்டெருமை இறந்து கிடந்தது. இதை பார்த்த கணேசன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறை சார்பில் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்த காட்டெருமையை மீட்டனர். பின்னர் கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து காட்டெருமை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
- மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள வடகாது அத்திமூர் ஏழுமலை மகன் குரு நிலத்தில் நேற்று காலை அவ்வழியே மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை மின் சாரம் தாக்கி இறந்தது.
இது குறித்து தகவலறிந்த போளூர் வனத்துறை அலுவலர் குமார், கிராம நிர்வாக அலுவலர் இளையகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.