என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் மீது தாக்குதல்"

    • 6 பேரை அழைத்து வந்து தாக்கினார்.
    • வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை வினோத்குமார் வெளியே சென்று செல்போனில் பேசும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் மேலும் 6 பேரை அழைத்து வந்து வினோத்குமாரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரைத் தேடி வந்தனர். அதில் சின்னத் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

    • மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி காந்திநகர் பகுதி சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன் தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (23), லோகநாதன் மகன் கோபி (32), மற்றும் ரவி, ஆறுமுகம் ஆகியோர் சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    இதைக் கண்ட மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாரியப்பனை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ரவி மற்றும் ஆறுமுகத்தை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • 2 பேர் கைது
    • வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு இளவரசன் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    நேற்று 3 பேர் ஒரே பைக்கில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் வளாகத்தில் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு செல்ல முயன்றனர். இதற்கு இளவரசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த3 பேரும் இளவரசனை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த இளவரசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இருந்தாலும் 3 பேரும் அவரை தொடர்ந்து தாக்கினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    2 பேர் கைது

    இது குறித்து இளவரசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை தாக்கிய சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி( வயது 26), அவரது சகோதரர் பார்த்தசாரதி (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ×