search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதை"

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த புவனேஸ் வரிபேட்டையில் ஸ்ரீமுத் துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத னால் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கோவி லுக்குள் இருந்த மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப்பிலான பொருட் கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு வாலிபர் கோவிலுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பது தெரிந்தது.

    இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி பேட்டையில் சுற்றி திரிந்த நித்தியா னந்தத்தை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தத்தை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் மகன் தகராறு
    • போலீசார் மகனை அழைத்து அறிவுரை

    கன்னியாகுமரி:

    குளச்சலை அடுத்த மேற்கு நெய்யூர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 67). இவரது மனைவி சுசீலா (65). இந்த தம்பதியின் மகன் பிரபாகரன் (42).

    இவர் சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பழனி குளச்சல் போலீசில் பலமுறை புகார் செய்துள்ளார். போலீசார் பிரபாகரனை அழைத்து அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பிரபாகரன் வீட்டில் தகராறு செய்து தனது தாயார் சுசீலாவை கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் பிரபாகரன், அவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 3 பேர் மீது வழக்கு
    • படுகாயம் அடைந்தவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர் வாழைப்பிலாவிளையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சிராயன்குழி வழியாக சென்ற கிறிஸ்தவ ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பிரகாசை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜோபின் உட்பட 3 பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தகராறு
    • டீ கடை உரிமையாளர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் பசுபதி (வயது 37).

    இவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த சுனில் மனைவி அருள்மேரி (38) என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பார்வதிபுரம் கிறிஸ்டோபர்காலனியை சேர்ந்த ராம்ஜித் என்பவருக்கு கடனாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. ராம்ஜித் சுங்கான்கடை அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இதில் ரூ.53 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த ராம்ஜித் ரூ.47 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுபற்றி பசுபதி மற்றும் அருள்மேரி இருவரும் சேர்ந்து சுங்கான்கடை டீக்கடையில் இருந்த ராம்ஜித்திடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் அருள்மேரியை கையால் தாக்கிய ராம்ஜித், பசுபதியை டீ போடும் ஜக்கால் தலையில் தாக்கி யுள்ளார். இதில் காயமடைந்த பசுபதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், அருள்மேரி வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ராம்ஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
    • 10 பேர் மீது வழக்கு.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் .கருக்கல்வாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (40). இவரை அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்த ரவி, நவீன், நல்லதம்பி, ஐயம்மாள், குமார், ராஜமாணிக்கம், காசி, செல்வி, வள்ளி, மோகன் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×