search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதகர்"

    • பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
    • தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2013-ம்ஆண்டு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை தூத்துக்குடி புதுக்கோட்டை மங்களகிரி விலக்கில் உள்ள ஒரு தியான இல்லத்திற்கு சென்று போதகர் மைக் மகிலன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு போதகரை இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் அந்த போதகர் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் தொழில் செய்ய வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் இருந்து தனது சகோதரர் மூலமாக ரூ 5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு அந்த போதகர் மறுத்துள்ளார். இதனால் அந்தபெண் இதுகுறித்து போதகர் மகிலனிடம் முறையிட்டபோது அவரும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 11-ந் தேதி நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருவரிடம் கேட்டபோது வெளியே அந்த பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மதபோதகர் மைக் மகிலன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, போதகர் மைக் மகிலன் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 417, 420, 506 (1) மற்றும் பெண்களை கொடுமைப்படுத்துதல் தடைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாஜக பெண் கவுண்சிலர் உள்பட 3 பேருக்கு போலீசார் வலை வீச்சு
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்காமண்டபம் காஞ்சிரத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்பர்ஜன் (வயது 42).இவர் காஞ்சிரத்துகோணம் பகுதியில் கிளிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தக்கலை அருகே பத்மனாபபுரம் அரண்மனை அருகில் தனது காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அப்போது பாஜக கவுன்சிலர் ஷீபா மற்றும் கணவர் நாகராஜன், பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த வவ்வால் என்ற ராஜன் மற்றும் சாரோடு பகுதியை சேர்ந்த வின்சென்ட் சர்சில் ஆகி யோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி ஸ்பர்ஜனை தாக்கி காரையும் உடைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த ஸ்பர்ஜன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

    இதுப்பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் 4 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் பத்மனாபபுரம் பகுதியில் வைத்து ராஜனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

    • ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.
    • போதகரும் 28-ந் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45 வயது மனைவி யுடன் வசித்து வருகிறார்.

    இவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் உள்ளார். ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ததேயுபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 45 வயது உடைய ஒரு நபர் தன்னை போதகர் என கூறிக் கொண்டு ஆட்டோ டிரைவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

    அதன்பின்னர் பிரா ர்த்தனை செய்வதற்காக ஆட்டோ டிரைவர் வீட்டி ற்கு அவர் அடிக்கடி வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காலையில் சவாரி சென்று விட்டு ஆட்டோ டிரைவர் வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவரது மனைவியையும் காணவில்லை.அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

    உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் மனைவி பற்றி தகவல் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வழக்கமாக பிரார்த்தனைக்கு வரும் போதகரும் வராமல் இருந்ததால் ததேயுபுரம் சென்று அவரது வீட்டில் ஆட்டோ டிரைவர் விசாரித்துள்ளார்.

    அப்போது போதகரும் 28-ந் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம் என ஆட்டோ டிரைவர் கருதினார்.

    இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் மனைவி, திருமணமான தனது மகளுக்கு போன் செய்து, தான் போதகருடன் தேங்காப்பட்டணம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இது குறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சி. எஸ். ஆர். பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை போதகருடன், ஆட்டோ டிரைவர் மனைவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்த போது, போலீஸ் தங்களை தேடியதால் தஞ்சம் அடைந்ததாக போதகர் தெரிவித்தார்.

    ஆட்டோ டிரைவரின் மனைவி, போலீசில் கூறுகையில்,கணவர் தன்னை அடித்து துன்புறுத்து வதாகவும் அதனால், தான் கணவர் வீட்டிற்கு செல்ல வில்லை என்று தெரிவித்ததார். பின்னர் அதை இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றனர்.

    முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் நிலையத்தில் வந்து குவிந்தனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது/

    • சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முட்டைக்காடு பண்ணிபாகம் சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் உடலை கைபற்றி தக்கலை அரசுமருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்ய ஒப்படைத்தனர். பின்னர் இவர் யார் என விசாரணை செய்ததில் முளகுமூடு முப்பதாங்கல் பகுதியை சேர்ந்த அமலராஜேஷ் (வயது 34) கிறிஸ்தவ மத போதகராக உள்ளார் என தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    ×