என் மலர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் புகார்"
- மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார்
- குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் , பாப்பிரெட்டிபட்டி அடுத்த சில்லார அள்ளி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சில்லார அள்ளி கிராமத்தில் 20 வீடுகளுக்கு முன்பு மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார். அதனால் மாசு ஏற்படுவது மட்டுமின்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்னர் அதிகாரிகளின் நடவடிக்கையால் குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
மீண்டும் மறுநாளே பஞ்சாயத்து தலைவர் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் அராஜகத்தில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
- கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இச்சாலையையொட்டி ஆனந்த சராகம் ஏரிக்கு செல்லும் ஓடை உள்ளது.
இந்த ஓடையில் கவுந்த ப்பாடி மற்றும் சுற்றுப்பகு தியில் உள்ள கோழி உள்ளி ட்ட இறைச்சி கடையினர், இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவு, குடல், எலும்புகள் போன்ற வற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாய் உள்ளிட்ட பல விலங்குகள், அவற்றை தூக்கி சென்றும், சாலை உள்ளிட்ட பல இடங்களில் விட்டு செல்கின்றன.
இதுபோல கோவில் பகுதியிலும் இறைச்சி கிடப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் மக்களும், பக்தர்களும் சிரமப்படு கின்றனர். இது பற்றி ஏற்கனவே பல அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு இப்பிரசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இறைச்சி கழிவுகளை வேறு இடத்தில் கொட்டி பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
- விலையில்லா மாடுகள் வழங்க லஞ்சம் ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் விலையில்லா மாடுகள் வழங்க லஞ்சம், ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள தோளிப்பட்டி கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில்,
தோளிப்பட்டி பஞ்சாயத்தில் தமிழக அரசால் 50 பேருக்கு விலையில்லா கறவை மாடு வழங்கப்பட்டது. இதற்காக பஞ்சாயத்து தலைவர் சுமதி மற்றும் அவரது கணவர் ராமசாமி ஆகியோர் மாடு ஒன்றுக்கு ரூ.13,500 லஞ்சமாக எடுத்துக் கொண்டு மீதி தொகையை கொடுத்தனர். எதற்காக இந்த பணத்ைத எடுத்தீர்கள்? என்று கேட்டதற்கு டாக்டர், தாசில்தார் மற்றும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
இதேபோல 50 பேரிடமும் கறவை மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் தோளிப்பட்டி காலனிக்கு அருகில் புறம்போக்கு நிலம் 16 ஏக்கருக்கு மேலாக உள்ளது. தற்போது அரசின் மூலம் தரிசு நிலங்களில் மேய்சலுக்காக புல் போட்டு வேலை செய்யபோவதாக ஊராட்சி தலைவர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் மூலம் தகவல் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உள்ள இப்பகுதியில் தோட்ட நிலங்களுக்கு பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவாக மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அளித்துள்ளோம் என்றனர்.