search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா"

    • வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ந் தேதி அன்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி17ந் தேதியன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண விகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு "தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவ ர்க்கு அண்ணா, அண்ணா வின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு" பேரறிஞர்அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,

    பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சு வட்டில், தம்பி ! மக்களிடம் செல்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு " தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளிலும்,

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
    • தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டது.
    • இந்த சிற்பத்தினை சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இலந்தவிளை கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அண்ணா வை நினைவு கூறும் வகையில் அவரது படம் மற்றும் தமிழ்நாடு வரை ப்படம் மணல் சிற்பமாக வடிவமைக்கப்பட்டது.

    இந்த மணல் சிற்பத்தை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-அன்று தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு உருவான வர லாறு, மொழிவாரி மாகா ணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்ட ங்களும், தமிழகத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகள், தாய்நாட்டிற்கு பெயர் சூட்டிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள்.

    எல்லைப்போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது நினைவகங்கள் மற்றும் மண்டபங்களில் வண்ண விளக்குகளால் அலங்க ரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலந்தவிளை கடலோரப் பகுதியில் கடல் மண்ணினால் பேரறிஞர் அண்ணாவை நினைவு கூறும் வகையில் உருவா க்கப்பட்ட மாபெரும் மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.

    இந்த சிற்பத்தினை சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து கடற்கரை யில் மணலால் உருவாக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட்டினை அவர் பார்வையிட்டார். மேலும், விளையாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கிடையே கடற்கரை யில் நடைபெற்ற செஸ் போட்டியினை பார்வை யிட்டதோடு நான்கு சக்கர வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கரை ஒட்டினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், சுற்றுலா அலுவலர் சீதாராமன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், புத்தளம் பேரூராட்சி தலை வர் சத்தியவதி, செயல் அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு செஸ் கூட்ட மைப்பு துணை தலைவர் எப்ரோன், துணை தலை வர் பால்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×