search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரங்க போட்டி"

    • காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து 44 மணி நேரம் சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழக அரசின் சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. சதுரங்கப் போட்டிகளுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வம், விருப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் மாவட்ட சதுரங்கக்கழகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த 22-ந் தேதி மாலை 6.45 மணி முதல் நேற்று (24-ந் தேதி) மாலை 2.45 மணி வரை 44 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சதுரங்கப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 இருக்கைகள் அமைத்து 1 சுற்றிற்கு 100 சதுரங்கப் போட்டி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1,437 வீரர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வயது குறியீடு அளவு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறந்த நிலை போட்டியாக அறிவிக்கப்பட்டதால், சதுரங்கப்போட்டி வீரர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த சதுரங்கப்போட்டி சோழன் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சோழன் நிறுவனர் நிமலன் நீலமேகம், ஒருங்கிணைப்பாளர்கள் சேது முத்துக்குமரன், மகேஷ்மணிமாறன், செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி தாளாளர்கள் செல்லப்பன், சத்யன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் கண்ணன், தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெறும் 12 மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கு பெறுவார்கள் என பள்ளி கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டார அளவிலான 2022 சதுரங்க விழிப்புணர்வு போட்டியினை நேற்று தருமபுரி பள்ளி கல்வித்துறை சார்பில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள், 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்கள், 11 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 380 மாணவ, மாணவியர்கள் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சென்ராயன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ராகோபால், முன்னிலை வகித்தார். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் ஏ.எஸ்.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியின் முடிவில் வெற்றி பெறும் 12 மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கு பெறுவார்கள் என பள்ளி கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் லலிகம் உயர்கல்வி ஆசிரியர் சாக்ரடீஸ் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளியில் சதுரங்க போட்டியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 44-வது சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு ராஜபாளையம் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில், தமிழ்நாட்டில் நடக்க இருப்பது முதல்வரின் விடா முயற்சியே காரணம். சதுரங்கபோட்டியானது மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள தங்களை தாங்களே சோதித்துக் கொள்ள இந்த போட்டியை தேர்ந்தெடுத்து விளையாடினர். அதுபோல் மாணவசெல்வங்களாகிய நீங்கள் உங்களது அறிவை தீட்டுவதற்கும், கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் இந்த போட்டி உதவியாக இருக்கும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு சதுரங்க போட்டியை போலீஸ் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.
    • அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளிடையே விழிப்புணர்வு சதுரங்க போட்டி நடந்தது.

    போலீஸ் டி.எஸ்.பி. சின்னகன்னு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சந்தனவேல், பயிற்சி டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி முன்னிலை வகித்தனர்.

    விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார் இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 56 மாணவர்களும், 48 மாணவிகளும் கலந்து கொண்டனர். 6, 8-ம் வகுப்பு பிரிவில் முதல் பரிசு காக்கூர் செல்வப்பாண்டி, 2-ம் பரிசு விளங்குளத்தூர் வெற்றிவேல், 3-ம் பரிசு முதுகுளத்தூர் விஷ்வா ஆகியோர் வென்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு உலையூர் ஜெனி ஸ்ரீ, 2-ம் பரிசு காக்கூர் மாலினி, 3-ம் பரிசு விளங்குளத்தூர் சங்கீதா ஆகியோர் பெற்றனர். 9-10-ம் வகுப்பு பிரிவில் முதலிடம் அலங்கானூர் முத்துகுமார், 2-ம் இடம் கீரனூர் அருண்குமார், 3-ம் இடம் கீரனூர் டேனில் ஆகியோர் பெற்றனர்.

    10 -12-ம் வகுப்பு மாணவர் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் எழில்வேந்தன், 2-ம் பரிசு அலங்கானூர் ஹரீஷ் திவாகர், 3-ம் பரிசு அலங்கானூர் ஸ்ரீராம், 11 - 12 மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் நிவேதா, 2-ம் பரிசு முதுகுளத்தூர் சிவபாரதி, 3-ம் பரிசு அலங்கானூர் அங்காளஈஸ்வரி, 9-10-ம் வகுப்பு மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் மகாலட்சுமி, 2-ம் பரிசு காக்கூர் பவனா, 3-ம் பரிசு விளங்குளத்தூர் முத்துப் பிரியா ஆகியோர் பெற்றனர்.

    சதுரங்க விளையாட்டுப் போட்டியில் 5 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியர் (பொறுப்பு) கர்ணன் தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நவமணி, பாலின் ஜெரால்டு மேரி, சர்மிளா ஆகியோர் போட்டியை கண்காணித்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

    • 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.
    • திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையோன சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் 120 மாணவிகள், 110 மாணவர்கள் உள்பட 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற18 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜகோபால், அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனியன், ஆசிரியர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மருதை நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் வரும் 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
    • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

    திருப்பூர்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரையில் 44 -வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 4 பிரிவுகளில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் ஜூலை 14 ந் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (திருப்பூா்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அவிநாசி), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (ஊத்துக்குளி), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பல்லடம்), கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி (பொங்கலூர்), மடத்துக்குளம், குடிமங்கலம், காங்கயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வெள்ளகோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 13 இடங்களில் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25 ந்தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் நபா்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

    ×