என் மலர்
நீங்கள் தேடியது "அர்ச்சுனன் தபசு"
- சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது.
- விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து வியந்து செல்கிறார்கள். அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள சிலைகளில் ஆன்மீக வரலாறு, இயற்கை, கால்நடைகள் மற்றும் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து நிகழ்வுகள் சிற்பக்கலை மூலமாக சிலையாக செதுக்கப்பட்டு இருக்கும். இதை பார்த்து ரசிக்கவும், கதையை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவர்.
இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அர்ச்சுனன் தபசு அருகே உள்ள தலசயன பெருமாள் கோவில் இடத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் "3டி" லேசர் ஒளி-ஒலி காட்சிக்கூடம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது. எனவே விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- மகாபாரத நாடகங்கள் நடந்துவருகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த, படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 19-ந் தேதி அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது.
இதனையொட்டி கடந்த 25-ந் தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடந்துவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாடக நடிகர் அர்ச்சுனன் வேடம் அணிந்து தவசு மரம் ஏறினார். அவர் மரத்தின் மீது நின்று கொண்டு எலுமிச்சை பழம், மஞ்சள், குங்கும உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு வீசினார்.
குழந்தை மற்றும் திருமணம் வரம் வேண்டி பெண்கள் மற்றும் பக்தர்கள் தபசுமத்தை சுற்றி வந்து வணங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர்.
- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, அர்ச்சுனன்தபசு, புலிக்குகை போன்ற பகுதிகளை ஐ.நா. சபையின் கலாச்சார பிரிவு (யுனஸ்கோ) சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரித்து உலகளவில் விளம்பரமும் செய்து வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். இவர்களிடம் மத்திய தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக ரூ.600 வசூலிக்கின்றனர்.
இந்த நினைவு சின்னங்களில் உள்நாட்டு பயணிகள், காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பெயர்களை கரியால் எழுதுவதும், கற்கலால் கிறுக்குவது, அதன்மேல் அமர்ந்து மது அருந்துவது என சிற்பங்களை சேதப்படுத்தி வந்தனர். இதை தடுக்கும் வகையில் தொல்லியல்துறை நிர்வாகம் கூடுதலாக நிதி ஒதுக்கி, துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு போட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.
இந்நிலையில் அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர். இதில் அர்ச்சுனன்தபசு யானை சிலை மீது ஒரு பட்டாசு விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதில் லேசான சேதமும், கருமை நிறமும் படர்ந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலகத்தில் கேட்டபோது புராதன சின்னம் அருகில் வெடி வெடிக்க தடைகள் இருந்தும் அத்துமீறி வெடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எங்கள் டிக்கெட் கவுண்டர், பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். இனி இதுபோல் நடப்பதை தடுக்க பண்டிகை நாட்களில் அப்பகுதியில் கூடுதல் காவலர்களை நிறுத்துவோம் என்றனர்.
- குழந்தை வரம் வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடு
- ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
நேற்று காலை கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமனிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்து காட்டினார்.
தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர்.
வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சம்பத், ஊராட்சி தலைவர் வள்ளியம்மாய் ராஜேந்திரன், துணை தலைவர் மணிமேகலை அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிசிவலிங்கம், முன்னாள் தலைவர் மாணிக்கவேலு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.