என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளில் ஆய்வு"

    • தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
    • இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

    தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, உதகை பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கட்டபெட்டு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

    பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வித்தரம் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து குன்னூரில் சில்வா்டேல் பகுதியில் தன்னாா்வலா்களைக் கொண்டு நடத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.

    இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

    தமிழகத்தில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் பொதுப் பணித் துறை மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித் துறைக்கு ஏற்கெனவே ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 3 மாதத்துக்குள் படிப்படியாக நிரப்பப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை எட்டியிருக்கும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் தற்போது 34 லட்சம் மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா் . இவ்வாறு அவர் கூறினார். 

    • பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.
    • அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சரயுவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகளில் கழிப்பறை வசதிகளும், தண்ணீர் வசதிகளும் இல்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள்.

    எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக ள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என ஆய்வு செய்திட வேண்டும். மேலும் அதிக மாணவ, மாணவிகள் உள்ள பள்ளிகளில் கூடுதல் கழிப்பிட கட்டிடங்கள் கட்டிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பாடு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது.
    • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.

    உடுமலை : 

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பாடு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது.

    முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆய்வாளர், உதவி திட்ட அலுவலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளடக்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொள்வர்.அவ்வகையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.

    இது குறித்து குழுவினர் கூறியதாவது:-

    ஆய்வின் போது வகுப்பறைக்கு நேரடியாக சென்று மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சோதிக்கப்படும். ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பது குறித்தும் கேட்டறியப்படும்.

    இது தவிர அலுவலர்களின் செயல்பாடு, பள்ளி வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை, குடிநீர் வசதி, பதிவேடுகள் பராமரிப்பு, எமிஸ் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்தும் பரிசோதிக்கப்படும்.குறைகள் கண்டறியப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். அதன்படி உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாதந்தோறும் 3 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 2-ம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    பள்ளிக்கல்வித்துறையில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும்விதமாக, மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்ேபாது, 2-ம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 2, 3-ந்தேதி செங்கல்பட்டு, 10, 11-ந்தேதி கடலூர், 16, 17-ந்தேதி திருச்சி, 23, 24-ந்தேதி விருதுநகர், செப்டம்பர் மாதம் 1, 2-ந்தேதிகளில் தருமபுரியில் மண்டல ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    தருமபுரி மண்டல ஆய்வின்போது, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    ×