என் மலர்
நீங்கள் தேடியது "Cyber crimes"
- அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
- ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கடலூர்:
வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி
- விழிப்புடன் இருக்க சைலேந்திரபாபு அறிவுரை.
சைபர் கிரைம் மோசடி கும்பல் பல்வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என தொடர்பு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெற்றோர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். குறிப்பாக மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.
வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பெற்றோர்களை பயப்பட வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது அழுகுரல் ஒன்றையும் ஒளிபரப்பி மகன் அழுவது போன்ற ஒன்றையும் ஒலிபரப்பி அவர்களை நம்ப வைக்கின்றனர்.
உண்மையை அறியாத சில பெற்றோர்கள் அவர்களது மகன் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக நினைத்து வாட்ஸ் அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்றலாம் என நினைக்கின்றனர்.
பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என கேட்டு நினைக்கும் போது, பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறுகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில் பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது.
- போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்ததும் மோசடி செய்ய முயன்ற நபர் அழைப்பை துண்டித்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு நேற்று மதியம் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்து உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்.
- விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.
திருப்பூர்:
சமீபகாலமாக மாணவர்கள் பலர், சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்கி பாதிக்கின்றனர். இதனைத்தடுக்கும் வகையில் போலீசார், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.அவ்வகையில் தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்தும் பள்ளிகளிலும் இணைய வழி குற்றங்களை தடுக்கும் வகையில், 'சைபர் ஜாக்ருதா திவாஸ்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: - இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை சைபர் குற்றங்களில் இருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போட்டிகள் நடத்தப்படுகிறது.மேலும், இணைய வழி குற்றங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வாயிலாக இணைய குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது. குற்றங்கள் தவறான வழிக்கு எடுத்துச்செல்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.குறிப்பாக நவீன சாதனங்களை நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.