search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கசிவு"

    • படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
    • விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31).

    இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது வேலைகளை முடித்துவிட்டு தனது மகன்கள் ஸ்ரீ பிரணவ்(11),ஸ்ரீ ஆரவ்(4) ஆகியோருடன் படுக்கை அறையில் உறங்கி விட்டார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த ஏ.சி.யில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தார். அப்போது படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அவர் படுத்திருந்த கட்டிலுக்கும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    மேலும் இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தெர்மல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் ரவிக்குமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் விஜயலட்சுமி வீட்டில் படுக்கை அறையில் பற்றிய தீ சமையலறை வரை பரவி எரிந்தது. அதனை மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு உடனடியாக அணைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டதால் விஜயலட்சுமியை தனது குழந்கதைளையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.

    விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 46). சம்பவத்தன்று இரவு கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கூரை வீடு எரியத் தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் தீ யில் எரிந்து நாசமாயின. இது குறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எறிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்துஎறிந்தது.தீமளமளவென பரவிஅடுத்தடுத்து ரவிச்சந்திரன், மங்கலட்சுமி ஆகியோர் வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
    • நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம். ஜாம்புவா னோடை ஊராட்சி மேல க்காடு பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.

    வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.

    தகவல் அறிந்த ஜாம்புவா னோடை கிராம நிர்வாக அலுவலர் புர்ஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் லதாபாலமுருகன், துணை தலைவர் ராமஜெயம், , ஒன்றிய கவுன்சிலர் கல்யாணம் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேதமான வீட்டை பார்வையிட்டனர்.

    • டிரான்பார்மரில் பசுமாடு மின் கசிவால் இறந்தது.
    • வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடலூர் ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் இருந்ததே டிரான்ஸ்பார்மில் ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக பசுமாடு உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

    ×