search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல்"

    • தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    கரூர்

    கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 16.8.2023 அன்று 40 வயதிற்குள் உள்ள ஆதரவற்ற விதவை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் வருமான சான்று, இருப்பிட சான்று, 6 மாதம் தையல் பயிற்சிக்கான சான்று, கல்வி சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர் அல்லது ஆதரவற்ற விதவை அல்லது வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற முகவரிக்கு வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
    • பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
    • பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

    வாடிப்பட்டி

    மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை கணினி பயிற்ச்சி, பேஜ் மேக்கர் கோரல்டிரா, போட்டோசாப், ஸ்போக்கன் இங்கிலீஷ், திறன் மேம்பாட்டு பயிற்சியும், அடிப்படை தையல் முதல் பவர் மெஷினில் அனைத்து விதமான ஆடைகளும் மற்றும் ஆரி ஜர்தோசி, எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் 18 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் கணினி பயிற்சிக்கும், பெண்கள் தையல் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியாளர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, பெட்கிராட், வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை.தொடர்புக்கு 89030 03090.

    • கூலி தொழிலாளிக்கு இடது கையில் பலத்தவெட்டு காயங்கள் ஏற்பட்டது.
    • சர்ஜிகல் ஸ்டேப்ளரை மருத்துவர் பரிந்துரை செய்தார். இது தொடர்ந்து அவருக்கு சர்ஜிகல் ஸ்டெப்ளர் மூலம் தையல் போடப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர். இவர் கடந்த வாரம் வேலை செய்யும் போது அவரது இடது கையில் பலத்தவெட்டு காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    உள்ளங்கையில் அடிபட்ட காரணத்தினால் தையல் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் உடனடி தீர்வு காண வேண்டி சர்ஜிகல் ஸ்டேப்ளரை மருத்துவர் பரிந்துரை செய்தார். இது தொடர்ந்து அவருக்கு சர்ஜிகல் ஸ்டெப்ளர் மூலம் தையல் போடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டி சேகரை 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து மருத்துவரின் ஆலோசனை பெருமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சேகர் தனக்கு புத்தகங்க ளுக்கு அடிக்கக்கூடிய ஸ்டேபிளரை அடித்ததால் தான் தனது காயம் ஆறவில்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவருக்கு சர்ஜிகல் சஸ்டேப்ளர் முறை குறித்து விளக்கம் அளித்தனர். இதுபற்றி மருத்துவ அலுவலர் குமாரசெல்வம் கூறியதாவது:-

    ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேகர் என்பவருக்கு சர்ஜிகல் ஸ்டேப்ளர் மூலம் தையல் போடப்பட்டது. இதுபற்றி யாரும் தவறாக சமூக வலைத்தளகங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

    மேலும் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனைகளில் சர்ஜிகல் ஸ்டேப்ளர் நடைமுறையில் உள்ளது. ஏற்காட்டில் கடந்த 2ஆண்டுகளாக ஏற்காட்டில் சர்ஜிகல் ஸ்டேப்ளர் சிகிச்சை முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

    சர்ஜிகல் ஸ்டேப்ளர் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம். பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×