என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இசை கச்சேரி"
- 2 பேர் படுகாயம்; 9 பேர் மீது வழக்கு
- 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழாவை யொட்டி இசை கச்சேரி நடந்தது. அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கும் ஜெய சூர்யா, கிஷோர், ஜெகன், ஆன்றனி உள்பட 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 5 பேரும் சேர்ந்து பிரபாகரனை அவ தூறாக பேசி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரபாகரன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஜெய சூர்யா, கிஷோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இதேபோல் ஆரோக்கிய புரத்தை சேர்ந்த ஜெகன், ரகு, ராஜன், ஆன்றோ, பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து ஆன்றனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆன்றனி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆன்றனி கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெகன், பிரபாகரன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே கோவில் திருவிழா இசை நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர்.
- நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் பிரபல பாடகர் பாலி இபுபாவின் இசைக்கச்சேரி நடந்தது. இதையொட்டி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டனர். 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது.
ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் காங்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை கச்சேரியை நடத்துகிறார்.
- இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
நியூயார்க் :
பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூனில் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட விசயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும்.
இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது. அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என தலைப்பிட்டார்.
அவர் அதில் கூறும்போது, இந்த கண் துடிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நீங்கள் காணலாம். எனது முகத்தின் ஒரு பக்கத்தில் என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. முக முடக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அதனால், அடுத்த எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்து விட்டதற்காக பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இது சற்று தீவிரம் வாய்ந்தது. நீங்கள் அதனை காணலாம் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன்.
நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என தெரிவித்து உள்ளார். எனினும், அவர் முழுமையாக குணமடைந்து எப்போது திரும்பி வருவார் என்பதற்கான காலஅளவு எதனையும் தெரிவிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது கடந்த 2 முறை அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
24 கோடி பேர் தொடரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை, 37 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து வேதனை அடைந்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். இந்த சூழலில், ஜஸ்டின் பீபர் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார்.
அவர் உலக சுற்றுலாவில் ஈடுபட உள்ளார். இதில் விரைவில் இந்தியாவுக்கும் வந்து பாப் இசை கச்சேரிகளை நடத்த இருக்கிறார். இதன்படி, இந்தியாவுக்கு வருகிற அக்டோபர் 18ந்தேதி வருகிறார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் அவர் இசை கச்சேரியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
ரூ.4 ஆயிரத்தில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. ஜஸ்டினுக்கு முக முடக்குவாதம் ஏற்பட்ட அதே வாரத்தில், அவரது மனைவி ஹெய்லி பீபர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தனது கணவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இது அரிதான மற்றும் அதிக அச்சமூட்டும் விசயம் ஆகவும் இருந்தது என அவர் கூறினார்.
இதன்பின்பு கடந்த ஜூனில் இருவரும் சர்ச்சுக்கு ஒன்றாக செல்வது, நடப்பு ஜூலையில் சுற்றுலா செல்வது என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஜஸ்டின் பீபர் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டபோது, வடக்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவர் மீண்டும் புத்தெழுச்சி பெற்று பாப் இசை பாடல்களை பாட இருப்பது அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்