search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொந்தரவு"

    • தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார்.
    • தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் சுமார் 100 முறை போன் செய்து தொந்தரவு செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. அந்த அழைப்புகளுக்கு பதிலளித்தும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு கட் செய்துள்ளனர். இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார்.

    என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பெண்ணுக்கு, ஒரு நாள் கணவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது, போனில் விளையாடும்போது அல்லது அவளுடன் நேரத்தை செலவிடும்போது அழைப்புகள் வராததை உணர்ந்தார். கணவர் மீது சந்தேகம் வந்ததை அடுத்து ஒருநாள் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் செய்யும் போது, அப்பெண் கணவரின் செயல்களை உன்னிப்பாகக் கண்காணித்தாள். அவன் தொலைபேசியைத் தொடாததைக் கவனித்தாள். அச்சமயத்தில் தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் தம்பதியரின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கணவரே வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், தம்பதியர்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இணக்கமாக வாழ்வதையும் தெரிந்து கொண்டனர்.

    இதையடுத்து கணவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை மிகவும் நேசிப்பதாக கூறினார்.

    ஜப்பானில், தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க மன உளைச்சலை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (US$7,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
    • இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    • பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து அந்த பெண் புதூர் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை புதுப்பட்டி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மனைவி பிரதீபா (வயது 27). இவர் நேற்று மாலை ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

    அழகர்கோவில் மெயின் ரோட்டில் ஆட்டோ சென்ற போது, டிரைவர் பிரதீபாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அவர், 'உன் செல்போன் நம்பரை கொடு. அது எனக்கும், உனக்கும் உபயோகமாக இருக்கும்' என்று கேட்டு உள்ளார். இதற்கு பிரதிபா மறுத்தார்.

    ஆத்திரம் அடைந்த 3 பேரும், பிரதீபாவின் கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்தனர். இது குறித்து பிரதீபா புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக வெள்ளக்கல், மந்தை அம்மன் கோவில் தெரு, ஆட்டோ டிரைவர் பாலமுருகன் (34), கோசாகுளம், பெரியார் நகர் கார்த்திக் (35) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    ×