search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பியாட் ஜோதி"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒலிம்பியாட் ஜோதியினை ராணிப்பேட்டை முத்து கடை பஸ்நிலையத்திலிருந்து செஸ் ஜோதி ஓட்டத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து ஓட்டத்தில் கலந்துகொண்டார்.

    முத்துக்கடையில் இருந்து செஸ் ஜோதியினை கலெக்டர் ஏந்திகொண்டு விசி மோட்டூர் வழியாக வாலாஜா வந்தடைந்தனர். பின்னர் ஆற்காடு நகராட்சி சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், நகரமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    • ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.
    • அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    நாகர்கோவில் :

    44-வது செஸ் ஒலிம்பியாட் உலக போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.

    தொடர்ந்து காலை 6.30 மணிக்கு காந்தி மண்டபத்தில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    ஒலிம்பியாட் தீபமானது திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு சென்று சிலையை சுற்றி வலம் வர உள்ளது. தொடர்ந்து அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற உள்ளது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலேக்டர்அரவிந்த். தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் டேவிட் டேனியல் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×