search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப் 4"

    • குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தி முடித்தது.
    • குரூப்-4 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு, அதற்கான தேர்வை கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ம் தேதி நடத்தி முடித்தது.

    இந்தத் தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வை எழுதிய தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

    தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஆனாலும் தேர்வு முடிவு வெளியிடப்பட இல்லை. 4-வது முறையாக மார்ச் மாதத்துக்குள் (இந்த மாதம்) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்தனர்.

    இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-4-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.7.2022 அன்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.2.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா்.
    • குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.

    ஊட்டி:

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.


    ஊட்டியில் சி.எஸ்.ஐ.சி. எம்.எம். உயா்நிலைப் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனிக் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், ஊட்டி வட்டத்தில் உள்ள 15 மையங்களில் 4,032 போ், குன்னூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,054 போ், கூடலூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,151 போ், கோத்தகிரி வட்டத்தில் உள்ள 5 மையங்களில் 1,370 போ்,

    குந்தா வட்டத்தில் உள்ள 2 மையங்களில் 319 போ், பந்தலூா் வட்டத்தில் உள்ள 4 மையங்களில் 1,225 போ் என 40 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 8,763 போ் தோ்வு எழுதினா். இது 78.58 சதவீதம் ஆகும். 2,388 போ் தோ்வு எழுதவில்லை.

    இத்தோ்வினை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பறக்கும் படை அலுவலா்கள், 6 வட்டங்களில் 6 மேற்பா ா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக் கூடங்களை கண்காணிக்க சம்பந்த ப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் நிலையில் மொத்தம் 40 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    தோ்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணி யாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள வழிமு றைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன.

    நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் கிருஷ்ணகுமாா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    மதுரை:

    மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி(வயது 47) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்த பின்பு வளர்மதி, பி.ஏ. தமிழ் படித்துள்ளார். தற்போது இவருடைய மகள் சத்யபிரியா பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி உள்ளார். கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வந்தது. இதையடுத்து நேற்று அந்த மையத்தில் தாயும்-மகளும் குரூப்-4 தேர்வு எழுதினர்.

    • தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
    • சென்னையில் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த வகையில் 9.35 லட்சம் ஆண்கள், 12.67 லட்சம் பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
    • சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த வகையில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    ×