என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்களாதேஷ்"
- வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது குறித்து விவாதம்.
- நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.
இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டின் நீர் வளத்துறை மந்திரிக ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். பங்களாதேஷ் நீர் வளங்கள் துணை மந்திரி இனாமுல் ஹோக் ஷமீமும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரை பகிர்வது, வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சனையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் இந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய-வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன. நிகழ்கால வெள்ள தரவுகளை இந்தியா வங்கதேசத்துடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தைமூர் கப்பலை ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்.
- தைமூரை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்த பங்களாதேஷ் அனுமதி மறுப்பு.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.
இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து பேரணி நடைபெற்றது.
- நரைல் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது.
டாக்கா:
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் பதிவு தொடர்பாக நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் இந்துக்களின் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற தொடர் தாக்குதல்களை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்