search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா, பங்களாதேஷ் இடையே நதி நீரை பகிர்வது குறித்து ஆலோசனை
    X

    கஜேந்திர சிங் ஷெகாவத்

    இந்தியா, பங்களாதேஷ் இடையே நதி நீரை பகிர்வது குறித்து ஆலோசனை

    • வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது குறித்து விவாதம்.
    • நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.

    இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டின் நீர் வளத்துறை மந்திரிக ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். பங்களாதேஷ் நீர் வளங்கள் துணை மந்திரி இனாமுல் ஹோக் ஷமீமும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

    இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரை பகிர்வது, வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சனையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் இந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.

    கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய-வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன. நிகழ்கால வெள்ள தரவுகளை இந்தியா வங்கதேசத்துடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×